Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது லாபமா - நஷ்டமா?

 தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது லாபமா - நஷ்டமா?

- நமது நிருபர் -

தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தது, கூட்டணிக்கு வலு சேர்க்கும் என, தலைவர்கள் கூறி வரும் நிலையில், அக்கட்சி வருகையால், லாபமா, நஷ்டமா என, தி.மு.க.,வினர் இடையே, விவாதம் நடந்து வருகிறது.

கடந்த 2005ல், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக, தே.மு.தி.க.,வை மறைந்த நடிகர் விஜயகாந்த் துவக்கினார். அதன் பின், தொடர்ச்சியாக சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட்டு வருகிறது. துவக்கத்தில் 10 சதவீத ஓட்டுக்களை பெற்று, தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவான தே.மு.தி.க., கூட்டணி விஷயங்களில் எடுத்த தவறான முடிவுகளால், கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் 2.6 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெறும் அளவுக்கு சுருங்கியது.
அதன் பின், கட்சிக்கு தூணாக இருந்து செயல்பட்ட விஜயகாந்தும் மறைந்துவிட, கட்சிக்கான மக்கள் செல்வாக்கு இன்னும் குறைந்தது. இருந்தாலும், அக்கட்சியை தங்கள் கூட்டணிக்கு கொண்டு செல்ல தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் தொடர்ந்து காய் நகர்த்தின.
இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி இணைந்துள்ளது. இது கூட்டணிக்கு வலு சேர்க்கும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறினாலும், அதை தி.மு.க.,வினர் ரசிக்கவில்லை.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க.,விடம் 20 தொகுதிகளின் பட்டியலை வழங்கி, அதில், 10 முதல் 12 தொகுதிகளில் போட்டியிட ஏதுவாக சீட்களை ஒதுக்க தே.மு.தி.க., கேட்டுள்ளது. குறிப்பாக, கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை, நெய்வேலி, கடலுார், மதுரை தெற்கு போன்ற தொகுதிகளை கேட்கப்பட்டுள்ளன. இவை தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேலை செய்யாமல், உள்குத்து வேலைகளில் தி.மு.க.,வினர் இறங்கினால், அது கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களில், தே.மு.தி.க.,வினரும், தி.மு.க.,வினரும், எதிரும் புதிருமாக அரசியல் செய்தவர்கள். அவர்கள் ஒன்றாக இணைந்து தேர்தல் பணியாற்றுவதில் சிக்கல் உள்ளது. அக்கட்சிக்கு பெரிய அளவில் ஓட்டு வங்கி இல்லை. இதனால், அக்கட்சியால் கூட்டணிக்கு பெரிய லாபம் இல்லை.

ஆனால், அதற்கு நேர் எதிராக கருத்துச் சொல்லி, தென் மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் தே.மு.தி.க.,வுக்கு இருக்கும் செல்வாக்கு தி.மு.க. கூட்டணிக்கே பெரிய அளவில் கைகொடுக்கும் என சொல்வோரும் உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

பிப் 21, 2026 01:26 pm

லாஷ்டம் , நபம் .

Reply Rate this
பிப் 21, 2026 01:19 pm

ஏற்கெனெவே கட்சி நிதிப்ரச்சினையில் சிக்கி தவிக்கிறது. பொறியியல் கல்லூரியை விலை பேசியதாக சமூகவலைத்தளங்களில் பேச்சு . அதில் வந்த கள்ளப்பணத்தை ஹவாலா முறையில் மாற்ற முயற்சி செய்தது மத்திய அரசுக்கு தெரிந்திருக்கலாம். இந்த அம்மா மாற்றி மாற்றி பேசுவதிலும் செயல்படுவதிலும் கில்லாடி . இவர்களுக்கும் கில்லாடியான பாஜக , மற்றும் அதிமுக , இவர்களோடு கூட்டணி அமைந்தால் தங்களுக்கு சிக்கல் என்று என்.டி ஏ கூட்டணிக்குள் வேண்டாம் என்று சொல்லியதால் போக்கிடம் இன்றி திமுகவுக்கு சென்றிருக்கலாம். மொத்தத்தில் பணம்தான் கருவி. கட்சி, கொள்கை , தொண்டர்கள் விருப்பம் எல்லாம் பீலா .

Reply Rate this
பிப் 21, 2026 12:28 pm

திமுக கொடுக்கும் அவ்வளவு பணமும் அம்பேல்.தேமுதிக நிற்கும் தொகுதி அனைத்திலும் பூத் கமிட்டிக்கு கூட பணம் கொடுக்க மாட்டானுங்க.திமுகதான் பூத் கமிட்டி முதல் அனைத்துமே பார்த்தாகனும்.இதான் நடக்கும்.அனுபவத்தில் சொல்றேன்.

Reply Rate this
பிப் 21, 2026 12:24 pm

சந்தேகமே இல்லாமல் பெரு நஷ்டம்.ஸ்டாலின் இந்த அளவு இருப்பார்னு நினைக்கல....5.8%வாக்குள்ள கட்சிக்கு ராஜ்யசபா 6தொகுதிகள் வேஸ்ட்.எடப்பாடி தப்பித்து விட்டார்.

Reply Rate this
பிப் 21, 2026 11:08 am

லாபமோ லாபம் அண்ணியாருக்கு கொள்ளை லாபம் தளபதிக்கு ஒரு தலைவலி போச்சு அதுதான் லாபம் எப்படியோ அன்னிக்கு சுக்ரதசை நடக்குது கட்டம் பாக்காமயே கண் பார்வை இல்லாதவன் கூட சொல்லிடுவான்

Reply Rate this
பிப் 21, 2026 11:03 am

உண்மையான விஜயகாந்த் ரசிகர் யாரும் நிச்சயம் திமுகவுக்கு ஒட்டு போட போவதில்லை.. அப்படி போட்டால் அந்த நல்ல ஆத்மாவிற்கு செய்யும் துரோகம் என்பதை அவரது உயிருக்கு உயிரான ரசிகர்கள் உணர்ந்துள்ளனர்.. அந்தம்மா அந்த நல்ல ஆத்மாவின் மனைவி என்பதால் அவர் இறந்த பிறகும் உடனிருந்தனர். இன்று பிரேமலதாவின் சுயநலத்திற்கு தம்பிக்கு ராஜ்ய சபா சீட்டு ஒரு பதவியை வாங்குவதற்காக இப்படி செய்துள்ளார். ஒரு ரசிகராக கேப்டன் அவர்களின் மனைவி நலமுடன் வளமுடன் வாழ உண்மையில் நினைக்கிறோம் / நேசிக்கிறோம்.. ராஜ்யசபா பெற்று நலமுடன் வாழுங்கள்.. ஆனால் நாங்கள் கேப்டன் ஆத்மாவிற்கு துரோகம் செய்ய மாட்டோம் ஒட்டு போடாமல் இருப்போம் அல்லது வேறு நல்லவர் யாராவது எங்கள் தொகுதியில் நின்றால் அவருக்கு போடுவோம்.. புரட்சிக்கலைஞர் அமரர் திரு கேப்டன் உணர்வுகளை என்றும் மதிப்போம். தீயசக்தி தீயமுகவை ஒழிப்போம்.

Reply Rate this
பிப் 21, 2026 10:10 am

அந்த அம்மாவுக்கு லாபம் ஸ்டாலினுக்கு நஷ்டம்

Reply Rate this
பிப் 21, 2026 09:16 am

வெரி சிம்பிள் பிரேமலதாவுக்கு கிடைத்த பணம் லாபம். திமுகவுக்கு மாணிக் தாகூர் வாயை அடைப்பதில் லாபம். பணத்தில் நஷ்டம். ஓட்டு வங்கியில் ஓட்டை. டபுள் நஷ்டம்.

Reply Rate this
பிப் 21, 2026 08:35 am

கட்சி காணாமல் போகும். வைகோ கட்சி மாதிரி ஆகிவிடும்

Reply Rate this
பிப் 21, 2026 08:18 am

திமுக எடுத்த முட்டாள்தனமான முடிவு. தொகுதிக்கு 1000 ஓட்டு கூட இல்லாத தேமுதிகவிற்கு 1 மாநிலங்களவை மற்றும் 6 சட்ட மன்ற உறுப்பினர் வாய்ப்பு என்பது அதன் தகுதிக்கு மிக அதிகம். காங்கிரஸை மிரட்டுவதாக நினைத்து படுகுழியில் வீழ்ந்து இருக்கிறீர்கள்.

Reply Rate this