Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 'சர்வாதிகாரி என கூறியதை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும்'

 'சர்வாதிகாரி என கூறியதை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும்'

சென்னை: 'குற்றச்செயல்களில் ஈடுபட்டு உயர் பதவிகளில் இருப்போர் மீது நடவடிக்கை எடுத்து சர்வாதிகாரி என கூறியதை, முதல்வர் ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த 2022 ஜூலை 3ம் தேதி, நாமக்கல்லில் நடந்த தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதுாக்குமானால், நான் சர்வாதி காரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் ' என்றார்.

நான் சர்வாதிகாரி தான் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதை நிரூபிக்க, இப்போது நேரம் வந்து விட்டது.சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் மீது, கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அஜித்குமார், போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகார் பொய்யானது என தெரிவித்துள்ளனர்.

நிகிதாவுக்காக அரசின் உயர் பதவியில் உள்ள சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, அஜித்குமார் அடித்தே கொல்லப்பட்டார் என்பது தெளிவாகிறது.

கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற செய்தியாளர்களை, தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த இரு சம்பவத்திலும் தொடர்புடைய, உயர் பதவியில் இருப்பவர்கள் மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து, தான் ஏற்கனவே சொன்னது போல, சர்வாதிகாரி என கூறியதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement