Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தேர்தல் களம் சூடுபிடித்து; திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

தேர்தல் களம் சூடுபிடித்து; திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று (பிப்ரவரி 20) தொடங்கியது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். மறுபக்கம் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் தொடங்கி உள்ளது. அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு விநியோகம் பணியை தொடங்கி, முழு வீச்சில் தேர்தல் பணியில் இறங்கிவிட்டது.

இந்த சூழலில், திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று (பிப்ரவரி 20) தொடங்கியது. தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல், மார்ச் 2ம் தேதி வரை, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். பொதுத் தொகுதிக்கு 25,000 ரூபாய், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு 15,000 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால், அவர்களின் விண்ணப்ப கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவத்தை தலைமை அலுவலகத்தில், 1,000 ரூபாய் வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

பிப் 20, 2026 02:58 pm

திமுக கட்சி தலைவராக விருப்ப மனு கொடுத்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்

Reply Rate this
பிப் 20, 2026 11:22 am

ஒரு புறம் விருப்ப மனு துவக்கும், மறுபுறம் ஊழல் வழக்கு பதிவு துவக்கம். சபாஷ் சரியாய் சொன்னீர்கள். களம் எதிர்பார்த்தைவிட சூடாகவே ஆரம்பிதிடிக்கிறது

Reply Rate this