Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு

ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துாரில் தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி ஆகியோர் போட்டியிட, தி.மு.க.,வினர் விருப்ப மனு அளித்தனர்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறும் பணி, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றனர். பொதுத் தொகுதிகளில் போட்டி யிட, விண்ணப்பக் கட்டணமாக 25,000 ரூபாய்; தனித் தொகுதிகளில் போட்டியிட 15,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனுவில், கட்சியில் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வேறு அமைப்புகளில் வகிக்கும் பதவி, கட்சி போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துார் தொகுதியில் கனிமொழி ஆகியோர் போட்டியிட, கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.

Advertisement

பிப் 21, 2026 02:56 pm

திருச்செந்தூருக்கு அக்கா கனிமொழி? அப்ப அவரோட காலியாகும் எம்.பி தொகுதிக்கு ?

Reply Rate this
பிப் 21, 2026 12:03 pm

ஏன் கொளத்தூர் பயமா? முஸ்லீம் ஓட்டு இருக்கும் தொகுதியா? அங்கேயும் தோற்க வேண்டும்.

Reply Rate this
பிப் 21, 2026 11:27 am

விருப்ப மனுவுக்கு கட்டும் பணம் சொந்த பணமா அல்லது துண்டர்கள் பணமா? ஏன்னா இவருக்கு இது வரை ஓசி காரு ஓசி வீடு தானே.

Reply Rate this
பிப் 21, 2026 11:04 am

கொளத்தூர்ல அறுத்து தள்ளிட்டாரு ஆயிரம் விளக்கு தொகுதிக்கு போறாரு

Reply Rate this
பிப் 21, 2026 11:00 am

கொளத்தூர் ல சட்டை கிழிஞ்சிருச்சி. சுப்ரீம் கோர்ட்டுல கேஸ் நடந்திண்டுருக்கு. இது வரை முகஸ்க்கு சாதகமா ஆர்கியூமென்ட் போயிண்டுருக்குன்னாலும் அடுத்தடுத்த ஆர்கியூமெண்ட்ல புட்டு கிட்டா முதலுக்கே மோசமாயிடுமே. அதுனால இளஞ்சிங்கம் வருங்கால இந்தியாவின் பிரதமர் ராகுல்+கான் பாணியில இப்போதைக்கு இடத்தை மாத்திடலாம் ஜெயலலிதா மாதிரி 4 இடங்களுக்கு விருப்ப மனு கொடுக்கலை.விருப்ப மனு குடுக்குறதுக்கு முன்னாடி தொண்டர்கள் விருப்பம் ன்னு பீலா வுடலையே.. அதுதான் வருத்தமா இருக்கு.

Reply Rate this
பிப் 21, 2026 10:24 am

முதல்வர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள கொளத்தூர் தொகுதி அனைத்து விதத்திலும் தன்னிறைவு பெற்றுவிட்டதா?


மறுபடியும் இங்கு நின்றால் கண்டிப்பாக தோல்வி அடைவார்

Reply Rate this
பிப் 21, 2026 10:16 am

இந்த முறை குளத்தூர் மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்ற பயம் காரணமா?விஜய்க்கு மாற பார்க்குது தெரிந்து ஓட்டமா? அப்போது உதயநிதிக்கும்?

Reply Rate this
பிப் 21, 2026 09:11 am

ராகுல் வயநாட்டில் போட்டிபோட்டதும் நம்மவரிடம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் ஒற்றுமையை பாருங்கள்.

Reply Rate this
பிப் 21, 2026 08:49 am

ராகுல் வயநாட்டில் போட்டியிட விரும்புவதுபோல நம்ம விடியலும் அந்த வகையில். பிரச்சாரத்திற்கு போகாமலேயே ஜெயிக்கலாம்.

Reply Rate this
பிப் 21, 2026 08:36 am

ஆயிரம் விளக்கு அடித்து பார்த்தாலும் வெளி வராத ஊழல்? அவ்வளவு ஆழம்?

Reply Rate this