Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., சாபம்

 விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., சாபம்

சென்னை: 'மக்கள் விரோத தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., இணைந்திருப்பதை, விஜயகாந்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது' என தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்ததை தொடர்ந்து, தமிழக பா.ஜ., வெளியிட்ட அறிக்கை:

தன் வாழ்நாள் முழுதும் தீயசக்தி தி.மு.க.,வை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர், தே.மு.தி.க.,வின் மறைந்த தலைவர் விஜயகாந்த்.

அதனால், விஜயகாந்துக்கும், அவர் உருவாக்கிய தே.மு.தி.க.,வுக்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது தி.மு.க.,

அத்தகைய மக்கள் விரோத தி.மு.க.,வுடன், விஜயகாந்த் உருவாக்கிய தே.மு.தி.க., இணைந்திருப்பதை, அவரது ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement