Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்

மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்

சென்னை: மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வரும் தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர் என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

முகாந்திரம்

2026ம் ஆண்டு தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லு முல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜினாமா

ஊழல் மலிந்த ஸ்டாலின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

தூக்கி எறிய

ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் திமுக அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வரும் தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Advertisement

பிப் 20, 2026 06:45 pm

தனது படத்துக்கு ப்ளாக்கில் டிகேட் விக்காதவங்க, ஒழுங்கா வரி கட்டுறவங்க ஊழலைப்பதி பேசணும்.

Reply Rate this
பிப் 20, 2026 05:53 pm

நீ என்ன ஒழுங்கா. பொய் ஓரமா குத்கோ

Reply Rate this
பிப் 20, 2026 05:03 pm

ஐயா சோசப்பு விசய் அவர்களே! இதைக் கூட அறிக்கை - பனையூரில் இருந்து கொண்டு விடுவீர்களோ ? ஒரு பத்திரிகையாளர் கூட்டம் கூட்டி உன் கட்சியின் நிலைப்பாட்டை சொல்லக் கூட துப்பில்லையா...

Reply Rate this
பிப் 20, 2026 04:31 pm

ஏட்டில் எழுதி முடிக்கமுடியாத ஊழல்கள். 75 வருட கதை.

Reply Rate this
பிப் 20, 2026 04:18 pm

ஊழலை உரிமையாக்கிய ஒரே கட்சி திமுக.

Reply Rate this
பிப் 20, 2026 03:59 pm

நீங்க டீ மூ கா வின் பீ டீம். அப்படி ஓரமா போய் விளையாடுங்க

Reply Rate this
பிப் 20, 2026 03:34 pm

That was really a good statement Vijay. This rotten government should be uprooted by like minded parties

Reply Rate this
பிப் 20, 2026 03:24 pm

உண்மை தளபதி விஜய் தமிழ் வரும் தேர்தலில் எழுச்சி பெரும்

Reply Rate this