தமிழக வளர்ச்சிக்காக அயராது பாடுபடுவோம்: பிரதமர் மோடி உறுதி
திருச்சி: தமிழக வளர்ச்சிக்காக அயராது பாடுபடுகிறோம். தொடர்ந்து பாடுபடுவோம் என திருச்சியில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
கேரளா மாநிலத்தில் இருந்து, பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணியளவில், திருச்சி வந்தார். தமிழர் பாரம்பரியமான வேஷ்டி, சட்டை அணிந்து வந்த அவருக்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அங்கு நடந்த அரசு நிகழ்ச்சியில், 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: திருச்சிக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய நிகழ்ச்சி தமிழகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. இன்று, 5,650 ரூபாய் கோடி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டங்கள் இணைப்பு திறனை மேம்படுத்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தால் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பயனளிக்கும். 9 லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு கிடைப்பதால் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தும். நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும். இயற்கை எரிவாயு, இயற்கைக்கு உகந்தது. காற்று மாசினை குறைக்கும். இந்த திட்டம், 4 கோடி மரங்கள் நடுவதற்கு இணையானது.
சேமிப்பு
சென்னையில் ஐஓசி நிறுவனத்தின் லூப் பிளெண்டிங் ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆலைகளில் இதுவும் ஒன்று. தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் , இந்த ஆலையானது தொழிற்சாலைகளின் தேவையை நிறைவேற்றி வைக்கும். மசகு எண்ணெய் இறக்குமதி குறைப்பதோடு, நாட்டின் பணத்தை மிச்சப்படுத்தும்.
வேலைவாய்ப்பு
மதுரை வந்த போது, அம்ரித் பாரத் திட்டத்தின்படி மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்கள் துவக்கிவைக்கப்பட்டது. இன்று புதிய ரயில்கள் துவக்கி வைக்கப்பட்டது. இவை நாகர்கோயில், கோவை, ராமேஸ்வரம், நெல்லை, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய இடங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கிறது. இந்த புதிய ரயில் சேவையால் சுற்றுலா துறை வளர்ச்சி அடைவதோடு,உள்ளூர் பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கம். தமிழக மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது மத்திய அரசு. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகிறோம். மேலும் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய திட்டங்கள்
* நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 3,680 கோடி ரூபாய் முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்திற்கு, பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
*சென்னை அடுத்த மணலியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின், 1,490 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, மசகு எண்ணெய் கலவை ஆலையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
*பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 370 கி.மீ., நீளமுள்ள, 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைத்தார்.
*தேசிய நெடுஞ்சாலை 81ல், கங்கைகொண்ட சோழபுரம் அருகே, பசுமை புறவழிச்சாலை அமைக்க, அடிக்கல் நாட்டினார்.
*இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும், மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடிக்கு, எல்.முருகன் நினைவுப்பரிசு வழங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு சால்வை அணிவித்தார். பொருநை அருங்காடசியகம் நினைவு சின்னத்தை பிரசாக வழங்கினார்
Advertisement
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பின்னல் இருக்கும் பேனர் ஏன் தமிழில் இல்லை?
கேரளாவில் 11,500 கோடிகள் திட்டம்கள் தொடக்கி வாய்ப்பு. தமிழ்நாட்டில் அதெற்கு பாதிதான். மக்கள் முட்டாள்கள் அல்ல
அநேகமாக இந்நேரம் இந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் தயாரித்து ஓட்டும் வேலையை ஆளும் திமுக ஆரம்பித்திருக்கும். அதற்கேற்றாற் போல 200 கொத்தடிமைகள் கூவவும் ஆரம்பித்திருக்கும். ஒரு மாநில முதல்வர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரின் இந்த திட்டங்களுக்கு ஆதரவு அளித்து கூட்டத்தில் பங்குகொண்டிருக்க வேண்டும் அதுதான் மாநில வளர்ச்சிக்கு உதவும். அதனையெல்லாம் விட்டுவிட்டு யாரோ கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்ததை வைத்து என்னமோ இவரது ட்யூசன் மூலம் அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதுபோல பீலா விட்டு ஓட்டுக்கு வழிவகை செய்துகொண்டுள்ளார் இந்த ஸ்டிக்கர் ஓட்டும் முதல்வர். நமது மாநிலத்தின் தலையெழுத்து..கொடுமை. பிரதமரும் இதுபோன்று உதவாமல் போயிருந்தால் தமிழகம் தலைகுனிந்திருக்கும் நிரந்தரமாக
Pessimists only look at the negative things and not positive side of PMs genuine efforts to develop TN. Pessimists will appreciate those who loot.
டாஸ்மாக் கட்டமைப்பை மேம்படுத்தவும் ,ஓட்டுக்காக மகளிருக்கு இலவசம் வழங்கவும் நிதி கொடுங்கள். திராவிட மாடல் இது தான்
10 ஆண்டுகள் என்ன செய்திர்கள்
கடந்த ஐந்து வருடங்களாக தமிழில் நாட்டுக்கு தரவேண்டியதை முதலில் தாறுங்கள்
ஏற்கனவே இருந்த திட்டங்களின் பேர் மாற்றி இப்போ தான் துவங்கியது போல செய்யும் ஒரே கூட்டம் இந்த கூட்டம் , ADDL செலவை புதிய திட்டம் என்று சொல்லி இப்படி பம்மாத்து வேலை

அய்ய்ம்ஸ் அசுபத்தரி இன்னும் நிலுவைதான், 10 நாளிலே அம்பானி வீட்டு திருமணத்துக்கு ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க தெரிந்த மோடி அவர்களே மதுரையில் இன்னும் பேச முடியுமா ? தவிர புதிய அம்ரித் பாராட், வந்டே பாராட் ரயில்கலாய் விட்டால் போதுமா ? கொரோனாவில் ரத்து செய்யப்பட பல ரயில்கள் இன்னும் ஓடவில்லை கலெக்ஷன் மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரியுமா ? உங்கள் ரயில்வே மந்த்திரிக்கு என்னதான் தெரியும் ? சும்மா வேஷ்டி கட்டுவது, திருக்குறள் சொல்வது எல்லாம் ரொம்ப பழைய டேகேனிக் ஐயா ?உங்களின் மினாரிட்டி அரசு இனி வீட்டுக்குத்தான்.