திருப்பம் வருமா? கூட்டணி குறித்து தவெக அவசர ஆலோசனை
நமது நிருபர்
சி.பி.ஐ., விசாரணைக்காக, த.வெ.க., தலைவர் விஜய் இன்று டில்லி செல்லும் நிலையில், சென்னையில் நேற்று திடீரென மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, 'கூட்டணி அமைக்கலாமா' என, அக்கட்சி தரப்பில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: த.வெ.க.,வை தே.ஜ., கூட்டணிக்கு கொண்டு வர, பா.ஜ., தரப்பில் முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், கரூர் நெரிசல் மரணம் தொடர்பாக, டில்லியில் சி.பி.ஐ., விசாரணைக்கு நாளை ஆஜராக, விஜய்க்கு 'சம்மன்' அனுப்பப் பட்டுள்ளது.
அதன்படி, இன்று மதியம் 3:00 மணிக்கு சென்னையில் இருந்து டில்லி செல்லும் விஜய், அங்கு, கூட்டணி தொடர்பாக சில முக்கியமான நபர்களை சந்திக்கும் திட்டமும் உள்ளது. மறுநாள் காலையில், சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராகிறார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், 'ஆன்லைன்' வாயிலாக கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, 'கூட்டணிக்கு போகலாமா என்பது குறித்து கருத்துகளை சொல்லுங்கள்' என கேட்டுள்ளார்.
அப்போது, 'கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும். கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பவன் கல்யாண் மாதிரி விஜய் துணை முதல்வர் ஆகலாம்' என பலரும் கூறியுள்ளனர். 'அப்படியென்றால், யாருடன் கூட்டணி அமைப்பது?' என ஆனந்த் கேட்க, 'யாருடனும் கூட்டணி அமைக்கலாம்' என பதில் அளித்துள்ளனர்.
ஆனால், ஒரு சில மா.செ.,க்கள், 'தனித்தே போட்டியிடலாம்' என கூற, 'கூட்டணி அமைத்து போட்டியிடலாமா; வேண்டாமா?' என கேட்டு, ஆன்லைன் வாயிலாக ஓட்டெடுப்பு நடத்தி உள்ளார் ஆனந்த்.
கூட்டத்தில் பங்கேற்ற 98 மா.செ.,க்களில் பெரும்பாலானோர், 'கூட்டணி அமைத்து போட்டியிடலாம்' என்றே ஓட்டெடுப்பில் கூறியுள்ளனர். பின், இது தொடர்பாக விஜயுடன் ஆனந்த் ஆலோசனை நடத்தி உள்ளார். கூட் டணி தொடர்பாக கட்சித் தலைமை விரைவில் முடிவை அறிவிக்கும்.
இதற்கிடையில், விஜய்க்கு நெருக்கமான விஷ்ணு ரெட்டி, தன் கோவா நண்பர் மூலமாக, பா.ஜ., டில்லி புள்ளிகளிடம் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட்டணியில் இணைவார்.
admk வுடன் கூட்டணி சேர்ந்தாலே நூறு பெர்ஸன்ட் வற்றி உறுதி கூட இருப்பவ்ர்கள் பேச்சை கேட்டு தனியாக நின்று ஓட்டுக்களை பிரித்து எதிரிகளை வற்றஇ பெற உதவி செய்யாதீர்கள் அரசியலில் மெதுவாக முன்னேற்றம் காணுங்கள் முதல் தேர்தலில் தோல்வி வர கூடாது நீங்க MGR கட்சியை எதிர்த்து அரசியல் செய்தால் நீங்க வெற்றி ம்பெற MUDIYATHU
he has no option either to choose NDA or INDI the whole idea is to accommodate the corrupt and difference of opinion..also he can say that ADMK is not his competition cos he was planning to ally with them.
துணை முதலவரெல்லாம் ஆக முடியாது தேர்தல் முடிந்த பின் கூட்டணி முறிய வாய்ப்பு
தீயசக்தியை அடியோடு முதலில் ஒழிக்க தேஜகூ உடன் சேரவேண்டியது தவெக வின் தலையாய உடனடி கடமை.
தேவையில்லாமல் வாக்குச்சீட்டுகளை பிடிப்பதால் நஷ்டம் தவெக விற்குத்தான்.
நல்ல முடிவு சீக்கிரம் அமல் படுத்துங்கள் நாடே உங்ககளைத்தான் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறது நல்ல முடிவாகவே இருக்கட்டும் கூட்டணி தேசிய ஜனநாயக கட்சிகளுடன் அமைப்பது நிச்சயம் தமிழகத்தில் உங்களது ஆட்சிதான் அரசாகும் இதில் சந்தேகமே இல்லை திராவிட மாடல் அரசை ஆட்சியிலிருந்து முற்றிலும் அகற்றி அழித்துவிட வேண்டும் தமிழகம் இனி உங்களது கூட்டாட்சியில் தலை தூக்க வேண்டும்
சுய நல விஜய் ஜோசப் பி ஜெ பி உடன் கூட்டணி வைத்தால் மக்கள் காறி துப்புவார்கள்.

வடைக்கு ஆசைப்பட்டு, எலிப்பொரி உள்ளப் போய் எலிப்பொரியில் எலியாக மாட்டிக்கொண்டு, எல்லாவற்றையும் இழந்து விஜய் நிற்பார். தனித்தே நின்று, தேர்தலைச் சந்திப்பது தான் விஜய்க்கு சிறந்தது.