Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 கறார் காட்டுகிறது தி.மு.க., : கடுப்பில் கம்யூனிஸ்ட்கள்

 கறார் காட்டுகிறது தி.மு.க., : கடுப்பில் கம்யூனிஸ்ட்கள்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் என தி.மு.க., கறார் காட்டுவதால், கடுப்பான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஆறு தொகுதிகள் வழங்கப்பட்டன. இவற்றில், இரு கட்சிகளும், தலா இரு தொகுதிகளில் தான் வெற்றி பெற்றன.

எனவே, வரும் சட்டசபை தேர்தலில், இரு கட்சிகளுக்கும் தொகுதிகளை குறைத்து கொடுக்க, தி.மு.க., முடிவெடுத்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக, தி.மு.க., குழுவினரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் குழுவினர் இரண்டு முறை பேச்சு நடத்தினர்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏழு தொகுதிகளை கேட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10 தொகுதிகள், அதாவது இரட்டை இலக்கத்தில் ஒதுக்குமாறு கேட்டது.

தி.மு.க., தரப்பில், இரு கட்சிகளுக்கும் தலா நான்கு தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டணியில் கட்சிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இதற்கு மேல் தர இயலாது என்றும் கறாராக கூறப்பட்டு விட்டது.

கடுப்பான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த வராமல் அடம் பிடித்து வருகின்றன. இரு கட்சிகளும் நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி, இந்த பிரச்னையில் முடிவெடுக்க உள்ளன.

அதன்படி, இன்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டமும், நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டமும் நடக்க உள்ளன.

Advertisement

மார் 14, 2026 09:57 am

பிரச்சாரத்துக்கு கேரள கம்யூனிஸ்டு தலைவர்களை அழைத்தாலும் அவ‌ர்க‌ள் காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதுதானே கூட்டணி தர்மம்? .

Reply Rate this
மார் 14, 2026 08:34 am

என்ன முடிவு

Reply Rate this
மார் 14, 2026 07:37 am

அவர்களுக்கு தொகுதி இல்லை என்று கூறினாலும் எங்கேயும் போக மாட்டார்கள்... இல்லன்னா பிஜேபி உள்ளே பூந்துறும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பிட்டை போடுங்க.... அத்தனை பேரும் வாயை மூடிக் கொண்டு போய் விடுவார்கள்.... அப்படியே அந்த பெட்டி.... அதை மட்டும் பெரிதாக கொடுத்து விடுங்கள்.

Reply Rate this