மக்கள் நலக்கூட்டணி 2.0 உருவாகிறதா; அறிவாலயத்தில் திக்...திக்...
நமது சிறப்பு நிருபர்
கடந்த 2021ல் கொடுத்த தொகுதிகளை காட்டிலும் இந்த முறை குறைவாகத் தான் தருவோம் என்ற திமுகவின் முடிவு, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேஜ கூட்டணியுடன் கூட்டணி வைக்க விஜய் கட்சி ஆலோசித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படவில்லை.
காங்கிரஸ், மதிமுக மற்றும் சில கட்சிகளுக்கு மட்டுமே தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்படவில்லை. கடந்த முறை தலா 6 தொகுதிகள் தரப்பட்ட இம்மூன்று கட்சிகளுக்கும், இந்த முறை தலா 4 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று முறை பேச்சு நடத்தியும் எந்த முடிவு ஏற்படவில்லை. இதனால் கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். வெளிப்படையாக பேசக்கூடிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், 'திமுக செய்வது நியாயமில்லை' என்று தன் கருத்தை இன்று (மார்ச் 14) தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கையை எங்கள் மாநிலக்குழு முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் மாநில செயலாளராக புதியவர் வீரபாண்டியன் பொறுப்பில் இருக்கிறார். பழைய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை மடக்கியதுபோல, இவர்களை பேசி சரிக்கட்ட முடியாமல் திமுக தலைமை திணறி வருகிறது.
தங்களுக்கு திருப்தி கரமான எண்ணிக்கையில் தொகுதிகளை திமுக தரவில்லை என்றால், பழையபடி மக்கள் நலக்கூட்டணி தொடங்கும் முடிவை கூட, கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் வாய்ப்புள்ளதாக, கோபத்தில் கொந்தளிக்கும் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
சண்முகம் பேட்டி
இது குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் இன்று கூறியதாவது: காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் தர முடியும் என்றால் எங்களுக்கும் தர வேண்டும்; எங்களுக்கு தர முடியாது என்பதில் நியாயமில்லை. திமுகவுடன் தொடர்ந்து பேச்சு நடக்கிறது. என்ன செய்வது என்பதை எங்கள் தேர்தல் குழு முடிவு செய்யும். இவ்வாறு சண்முகம் கூறியுள்ளார்.
திக்...திக்...நிலை!
'எல்லா திசைகளிலும் கூட்டணி பேரம் பேசி விட்டு வந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து, சட்டசபை தொகுதிகளையும் அள்ளிக்கொடுக்கும் திமுக, கொள்கைக்காக கூட்டணி வைக்கும் தங்களுக்கு குறைக்கக்கூடாது' என்று வி.சி., மற்றும் கம்யூ., நிர்வாகிகளின் வாதம்.
'திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொகுதிகளை குறைத்துக் கொள்ளலாம். தேமுதிக போன்ற ஒரு கொள்கையற்ற மூன்றாம் தர கட்சியை அவர்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதற்காக, நாங்கள் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் கொந்தளிக்கின்றனர்.
ஏற்கனவே விஜய் கட்சியுடன் பாஜ பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கம்யூ., வி.சி.,க்களின் முறுக்கல், அறிவாலய வட்டாரத்தில் திக்...திக்... நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement
தே மு தி க போன்ற கொள்கையற்ற மூன்றாம் தர கட்சியை கூட்டணியில் விடியல் சேர்த்து கொண்டுள்ளார்களாம் ......இப்படி தரை மட்டத்திற்கு கம்மிகள் பேசுகிறார்கள் ....இதை விடியல் கேட்டு சும்மா இருக்க முடியாது ....வெட்கம் மானம் உள்ள கட்சியாக இருந்தால் விடியல் இதை எதிர்த்து கம்மிகளை கேள்வி கேட்க வேண்டும் ...
பெட்டியின் கனத்தை முடிவு செய்ய இப்படி ஒரு கலாட்டா... போக்கத்த இவர்களுக்கு வேறு எந்த வழியிலும் இவ்வளவு பணம் கிடைக்காது - ஆகவே கண்டிப்பாக வேறு கூட்டணி அமைக்க மாட்டார்கள்.
அய்யய்யோ அவரா படு பயங்கரமான ஆளாச்சே. அப்படின்னு யார் சொன்னது? அவரேதான் சொன்னார்.
காசுக்காக கம்மிகள் எந்த நிலைக்கும் செல்வர். ஐக்கிய முன்னணி ஆட்சியில் பா ஜா கா வுடன் சேர்ந்து இருந்தனர்.
ஒரு கூட்டணியே இன்னொரு கூட்டணி கூட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி , கூட்டணி வைக்க முயற்சி செய்யும் . . . மக்கள்நல கூட்டணி , தே ஜ கூட்டணியுடன் கூட்டணி சேர , முயலலாம் . . .
ரெண்டு பேரும் பெரும் மானக்கேட்ட தலைவர்கள் தங்கள் சொந்த கட்சியின் கொள்கைகளை பணத்திற்கு அடமானம் வைத்த கட்சி தலைவர்கள்... இப்படி ஏதாவது சொன்னால் பணம் பெரிதாக கிடைக்கும் என்று எண்ணி சும்மா உதார் விடுகின்றனர்.... பணம் வந்தவுடன் நாளை ஒரு அறிக்கை வரும் பா சி ச பிஜேபி யை முறிடிக்க நாங்கள் இந்த கூட்டணியில் துடருவோம் என்று.... இதெல்லாம் அரசியலில் ஜகஜம்
இத்தனை நாட்களாக காங்கிரஸ் தவெக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்த திமுக இப்போது காங்கிரஸ் திமுகவுடன் இணைந்து இந்த கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடும் எட்டப்பட்டு விட்டதால் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட
திமுகவிற்கு இப்போது அடிவயிற்றில் புதிதாக ஒரு பயம் தொற்றிக் கொண்டுள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணைந்து விட்டதால் நடிகர் ஜோசப் விஜய்க்கு வேறு போக்கிடம் கிடையாது
அதனால் அவர் தனியாக நின்றுதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்த வேளையில் தீயசக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்று கூறிய விஜய் எங்கே ஒருவேளை NDA வில் இருக்கும் எடப்பாடியோடு கூட்டணி வைத்து விடுவாரோ என பயந்த ஸ்டாலின் தன் மருமகன் சபரீசனின் PEN நிறுவனம் மூலம் விசிகவும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், திமுகவுடன் தொகுதி உடன்பாடு எட்டாமல் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு புரளியை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கம்யூனிஸ்டுகளும், விசிக திருமாவளவனும் ஒருபோதும் திமுக கூட்டணியையும் அவர்கள் கொடுக்கும் பணத்தையும் விட்டு விட்டு விஜய் கூட்டணிக்கு போகவே மாட்டார்கள். இதெல்லாம் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிடக் கூடாது என்பதுதற்காக திமுக கிளப்பிவிடும் வதந்தி என்று சாமானியனான எனக்கே தெரியும் போது பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் குறிப்பாக நடிகர் விஜய்க்கும் தெரியாதா என்ன?

இந்த வடக்கன் காங்கிரஸ் கட்சியுடன் விடியல் என்ன தேர்தல் கூட்டணி ?.....படிக்காத வடக்கன் இங்கே வரும்போது ரெண்டு கிலோ கஞ்சா கொண்டு வருவதாக விடியல் மந்திரி பேச்சு ....தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ....வெட்கம் மானம் உள்ளவன் இந்த காங்கிரஸ் வடக்கனோடு கூட்டணி வைக்க மாட்டான் ......