விருத்தாசலமா; விருகம்பாக்கமா? குழப்பத்தில் தே.மு.தி.க., பிரேமலதா
- நமது நிருபர் -
சட்டசபை தேர்தலில் களமறிங்க விரும்பும் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, தி.மு.க., கூட்டணியில், விருகம்பாக்கம், விருத்தாசலம் ஆகிய இரண்டில் எந்த தொகுதியில் நிற்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
தி.மு.க., கூட்டணியில், இரட்டை இலக்க தொகுதிகளை, தே.மு.தி.க., எதிர்பார்க்கிறது. அதில் குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதி கேட்கப்பட்டுள்ளது. மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீடு, இந்த தொகுதியில் சாலிகிராமத்தில் உள்ளது. விஜயகாந்த்திடம் உதவி பெற்ற திரைப்பட ஊழியர்கள் அதிகமாக வசிப்பதால், அவர்களின் ஓட்டுக்கள் தே.மு.தி.க.,வுக்கு உறுதுணையாக இருக்கும் என, கருதப்படுகிறது.
இந்த தொகுதியில் ஏற்கனவே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, தே.மு.தி.க., சார்பில் பார்த்தசாரதி வெற்றி பெற்றுள்ளார். எனவே, அந்த தொகுதியை தர வேண்டும் என, தே.மு.தி.க., கேட்டு வருகிறது. அத்தொகுதியில் பார்த்தசாரதி மீண்டும் போட்டியிட்டால், அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்க உள்ள வி.என்.ரவியை எதிர்த்து தே.மு.தி.க., வெற்றி பெறுவது சிரமம் என, தி.மு.க., கருதுகிறது.
அதனால், பிரேமலதா அல்லது அவரது மகன் விஜய பிரபாகரன் இருவரில் ஒருவர் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்பதால், இருவரில் ஒருவர் போட்டியிட வேண்டும் என, தி.மு.க., தலைமை விரும்புகிறது.
ஆனால், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடவே, பிரேமலதா விரும்புகிறார். கட்சி துவக்கிய முதல் தேர்தலில், விஜயகாந்த் வெற்றி பெற்ற தொகுதி. தனக்கும் வெற்றியை தரும் என, பிரேமலதா நம்புகிறார். தற்போது, அத்தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது.
இதற்கிடையில், அ.தி.மு.க., கூட்டணியில், மயிலம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவக்குமார், விருத்தாசலத்தில் போட்டியிட விரும்புகிறார் என்றும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மயிலம் தொகுதிக்கு மாறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
விருத்தாசலம் தொகுதியில், பா.ம.க., போட்டியிடுமானால் சுலபமாக வெற்றி பெறலாம் என, பிரேமலதா கருதுவதால், அத்தொகுதியை பிடிவாதமாக கேட்டு வருகிறார். மொத்தத்தில், விருத்தாசலமா அல்லது விருகம்பாக்கமா என்ற, குழப்பத்தில் இருக்கிறார் பிரேமலதா என்கின்றனர், அவரது கட்சியினர்.
Advertisement
தி.மு.க கூட்டணியில் எப்போதும் உள்ள கட்சிகள் இந்த முறை தொகுதி குறைந்து விடுமா? குறைந்தாலும் நாம் கேட்கும் தொகுதியாவது ஸ்டாலின் கொடுப்பாரா? எனக் குழம்பிப் போய் உள்ளனர். இங்கும் ,அங்கும் மாறி,மாறி பேரம் பேசி எதிர்பார்த்த அளவு பெட்டி, தம்பிக்கு டெல்லிக்கு பெட்டி கிடைத்ததால் நேற்று கூட்டணிக்குள் வந்தவர் விருகம்பாக்கமா, விருத்தாச்சலமா என இவர் தொகுதியை தேர்வு செய்கிறாராம்? இவரையெல்லாம் கன்னியா குமரி அல்லது கோயம்புத்தூர் பக்கம் தள்ளிவிட வேண்டும்.
Hmm all fate ...Just a dream and pretend to show that they are exist. Good move by EPS
இந்த பெரும் பேராசை பிடித்த பிரேமலதா தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் நின்றாலும் தோல்வியடைவது உறுதி. தேமுதிக கட்சிகாரனுங்களே இவளை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்.
ரெண்டு விருவுமே வேண்டாம். மூன்றாவது விருவான விருது நகரில் இவரைப் போட்டியிட வைத்து இவரை 'ஜெயிக்க வைக்கும் பொறுப்பை தண்டனையாக மாணிக் தாக்கூருக்கு ஸ்டாலின் கொடுக்க வேண்டும்.
கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் நீங்கள் கண்டிப்பாக தோற்கத்தான் போகிறீர்கள்.
விருத்தாசலத்தில் தோற்றால் என்ன, விருகம்பாக்கத்தில் தோற்றால் என்ன.

ஏங்கே நின்னாலும் தோல்வி நிச்சியம்