Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


ராகுலுக்கு எதிராக கையேடு!: பா.ஜ., திட்டம்

 ராகுலுக்கு எதிராக கையேடு!: பா.ஜ., திட்டம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்ய, காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி சமீபத்தில் தீர்மானம் கொண்டு வந்தது.

அது தோல்வி அடைந்தாலும், காங்., பெரும் விமர்சனத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. அந்த விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், 'சபையில் பேச சபாநாயகர் நேரம் ஒதுக்குவதில்லை என, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் புகார் சொல்கிறார்.

'ஆனால், இதுவரை பட்ஜெட் விவாதம் நடக்கும் போது, இவர் நாட்டிலேயே இருந்ததில்லை. கடந்தாண்டு பட்ஜெட் விவாதத்தின் போது, வியட்நாமிலும், 2023 பட்ஜெட்டின் போது பிரிட்டனிலும் இருந்துள்ளார்' என, ஒரு பெரிய பட்டியலை வாசித்து, ராகுலை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், 'பேச வாய்ப்பு கொடுக்கும் போது சபையில் பேசாமல், வெளிநாட்டு பயணத்தில் நாட்டுக்கு எதிராக பேசுகிறார்' என அமித் ஷா சொன்ன போது, காங்கிரசாரும் ராகுலும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமைதியாக இருந்தனர். ராகு லின் வெளிநாட்டு பட்டியலை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஒரு முக்கிய பிரசாரமாக மேற்கொள்ள பா.ஜ., முடிவெடுத்துள்ளதாம். 'ராகுல் எத்தனை நாள் எந்த நாட்டில் இருந்தார், அங்கு நம் நாட்டுக்கு எதிராக என்ன பேசினார், எதிர்க்கட்சி தலைவரா அல்லது எதிரி நாடுகளின் துணைவரா' என, விலாவாரியாக ஒரு சிறிய கையேடு தயாரிக்கப் போகின்றனராம்.

இந்த கையேடை, த மிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தின் போது வினியோகிக்க பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.

Advertisement