ராமதாஸ் - சசிகலா திடீர் சந்திப்பு
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாசை, சசிகலா நேற்றிரவு சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தி.மு.க., மற்றும் தே.ஜ., கூட்டணிகளில் பலமுறை முயன்றும், அவரது முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக அவரது தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்றிரவு சசிகலா வந்தார். தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராமதாசும் சசிகலாவும் ஆலோசனை நடத்தினர். ஒன்றரை மணி நேரம் பேசிய பின், சசிகலா புறப்பட்டுச் சென்றார்.
புதிய கட்சியை துவக்குவதாக அறிவித்து, கட்சிக்கொடியையும் அறிவித்துள்ள சசிகலா, இதுவரை எந்த கூட்டணியிலும் இணையாத ராமதாசை சந்தித்துப் பேசியிருப்பது, புதிய கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
Advertisement
இதுதான் பெரிய்யா சொன்ன தமிழ்நாடே கலகலத்து போகும் செய்தியா.? உண்மையிலேயே ஆடி போயிட்டோம்
ஊரைக்கெடுத்த ஜென்மங்கள் என இவர்களை வைத்து படம் எடுத்தால் பிச்சுக்கிட்டு ஓடும்.
கண்டிப்பாக ஊழல்வாதியுடன் ராமதாஸ் சேரமாட்டார். சசிகலா தான் கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களை பராமரித்துக்கொண்டு பத்திரமாக இருக்க வேண்டும். ரெம்ப வாலாட்டினால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். இருவரும் காசி ராமேஸ்வரம் என்று இருந்தால் அவர்களுக்கு நல்லது. நாட்டு மக்களுக்கும் நல்லது.

வாய்தா போன கேசுகள் இரண்டு பேசி என்ன நடக்கப் pOkuthu?