தேஜ கூட்டணியில் இணைகிறதா விஜய் கட்சி; மாவட்ட செயலாளர்கள் அமோக ஆதரவு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலை தேஜ கூட்டணியில் இணைந்து சந்திக்க தவெகவின் 90 சதவீதம் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தவெக என்ற அரசியல் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய் தற்போது கரூர் சம்பவம், நடிகை திரிஷா விவகாரம் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். அவருடன் கூட்டணி அமைக்க பாஜ முயன்று வருகிறது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் அவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றெல்லாம் மீடியாக்களில் செய்திகள் வந்தன. ஆனால், இது பற்றி தமிழகத்தில் கூட்டணி தலைவரான இபிஎஸ், எதுவும ் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தவெகவின் ஆதவ் ஆர்ஜூனாவும் நேற்று நடந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்றார். நிர்மல் குமாரும்இதேபோன்ற கருத்தை கூறினார்.
எனினும் பாஜ தேசிய தலைமை, பல்வேறு வழிகளில் விஜய் தரப்பினரை தொடர்பு கொண்டு கூட்டணியில் சேர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், விஜய் அதிகப்படியான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தங்கள் கூட்டணிக்கு வந்து விடுமாறு, விஜய் தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாகவே இன்று மார்ச் 13ம் தேதி, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்துள்ளது. விஜய் உத்தரவுப்படி தான் இந்த கூட்டம் நடந்துள்ளது. இதில் 132 மாவட்ட செயலாளர்களில் 120 பேர் பங்கேற்றனர்.
அவர்களிடம் தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி வைக்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களில் 90 சதவீதம் பேர் கூட்டணி வைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் விஜய் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை பெற வேண்டும், விஜய்க்கு துணை முதல்வர் பதவியை கேட்டுப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன் வைத்துள்ளனர். தேஜ கூட்டணியில் தவெகவை இணைக்க நடக்கும் முயற்சிகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Advertisement
அந்த கட்சி மாவட்ட தலைவர்களுக்கு என்ன தெரியும்? அனுபவ முதிர்ச்சி இல்லாத தலைவன், பக்குவம் இல்லாத தொண்டன், வழிகாட்டி இல்லாத கட்சி தான் தவெக. வெளங்கிரும்
இப்போது ஜாதி மதம் பார்த்து வாக்களிக்க கூடாது. திமுக எனும் கொடிய அரக்க, மக்கள் விரோத, இமாலய ஊழலாட்சி மீண்டும் வரவே கூடாது என்று மக்கள் விரும்பும் காலம். எனவே தவெக அதிமுகவுடன் கூட்டணி நாட்டை காக்கும்.
தமிழகம் காக்கப்பட அதிமுக தவெக பாஜக ஒரு நல்ல கூட்டு. இல்லையேல் தமிழருக்கு வேட்டு.
இவையெல்லாம் திமுக நடத்தும் நாடகம். விஜய் மீதுள்ள சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை அழிப்பது தான் திமுகவின் லட்சியம். எனவேதான் விஜய் என் டி எவில் சேருகிறார் என்று பிட்டை கொளுத்தி போட்டு உள்ளார்கள்.
இவன் தனியாக நிற்பது தான் என்டிஏ விற்கு பலம். திமுகவிற்கு செல்லும் சிறுபான்மையினர் ஓட்டுக்களில் பாதி அவன் கொண்டு போய் விடுவான். அவன் என் டி ஏ வில் வந்தால் அவ்வளவு சிறுபான்மையினர் ஓட்டும் சிந்தாமல் சிதறாமல் திமுகவிற்கு சென்று விடும்.
துணை முதல்வர் எல்லாமும் திரு எடப்பாடியார் ஒத்து கொள்ள மாட்டார். வேணுமென்றால் எதிர்க்கட்சி தலைவராக வாய்ப்பு வழங்கப்படலாம். 40 சீட்க்கு விஜய் ஒத்துப்பாரா என்பதுதான் கேள்வி
வெறுமனே உறுதியற்ற செய்தியாக இருக்கும் போதே எங்கே நிஜமாகவே NDA, த.வெ.க கூட்டணி அமைந்து விடுமோ என்று நிறையப் பேருக்கு பயம், பதட்டம் இப்பவே தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. அது நிஜமாகவே நடந்து விட்டால்?

திமுக என்ற கொடிய அரக்கனை வீழ்த்துவதே எல்லோருக்கும் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். திமுக ஒரு கிரிமினல் மனோபாவ, அறிவியல் பூர்வ திருட்டு, தேச விரோத, பிரிவினைவாத கட்சி. திமுக வினர் சாட்சிகளை அழித்து, ஒழித்து திருட்டு வேலை செய்யும் கொடியவர்கள். திருடன் நல்லது செய்தால் சிறு மீன் போட்டு பெரிய மீன் பிடிக்கத் தான்.அத்தகைய மாபெரும் திருட்டு கும்பலை ஒழிக்க மற்றவர்கள் சிறு வேறுபாடுகளை, சுயநலத்தை விலக்கி ஒன்று சேர வேண்டும். இல்லையேல் அது திருடனுக்கு சாதமாகி விடும்.