பதவி அதிகாரம் எதிலும் ஈடுபாடு இல்லாதவர் ரஜினி: திருமாவளவன்
சென்னை: பதவி, அதிகாரம் எதிலும் ஈடுபாடு இல்லாதவர் ரஜினி என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான தலைவராக வர வேண்டும் என்று ரஜினி நினைத்தார். அரசியலில் சிஸ்டத்தை மாற்ற நினைத்தார். எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இதே திமுக குடும்பம் பல மிரட்டல்களை கொடுத்து அவர் அரசியலுக்கு வராமல் பார்த்துக்கொண்டார்கள்.
இன்றைக்கு அவருடைய நிலைமை என்ன? கடைசியில் அவர்கள் குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களில் நடிக்க போய் விட்டார். அவர் மேல் விமர்சனம் கிடையாது. ஆனால், அரசியலில் அந்த மனவலிமை நம்ம விஜய் கிட்ட இருக்கு என்பதை இங்கே பதிவு செய்கிறேன்'' என தெரிவித்தது கடும் விமர்சனங்களை கிளப்பியது. ரஜினி ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்தனர்.
இது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்: இது ஒரு ஆதாரம் இல்லாத கருத்து. அவர் எந்த அடிப்படையில் இதை இவ்வாறு சொல்லி இருக்கிறார் என்று தெரியவில்லை. பதவி, அதிகாரம் போன்றவற்றில் ரஜினி பெரிய ஈடுபாடு உள்ளவர் அல்ல. ஆசை உள்ளவர் அல்ல.
அவர் அந்த நிலையில் இருந்து முற்றிலும் விலகி நிற்பவர். முதிர்ச்சி அடைந்தவர் என்று நான் நம்புகிறேன். ஆகவே அவர் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சி தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி இருக்க வாய்ப்பே இல்லை. அது ஒரு தவறான கருத்து என்று நான் கருதுகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Advertisement
பிறகு எதற்காக யாரை எதிர்த்து அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்கிறார்
ஜோசப் புடவை கட்டிக்கிட்டு ஏர்போர்ட் ஓடினான் அதை சொல்ல வேண்டியடிக்கு தானே இந்த லாட்டரி பயல். இந்த ஆளோட மூஞ்சி பார்த்தா அந்த நாள் பூரா விடியாது.
ரஜினி ஓரு சுயநலமிக்க பயந்தாங்கொள்ளி. 2001ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வந்து பின் தொடை நடுங்கி ஆகிவிட்டார். அரசியல் என்று பூச்சாண்டி காண்பித்து பின் பதுங்கி கொண்டவர். விழாக்களுக்கு மட்டும் வந்து காதில் பூ சுற்றுவதற்கு தான் லாயக்கு.
எல்லா கட்சியிலும் , தலைவர்களிடம் துண்டு போட்டு வைத்தள்ள ஓரு சுயநலவாதி.
ரஜினி பற்றி இந்த தெருமா கருந்துகூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது... அறிவாலய ஆர்மி கூடுதலாக 1 சீட் வாங்க இப்ப கருத்து கூற ஆரம்பித்துவிட்டார்.. அடங்க மறு .. அட குமாரு ..
ரஜினிக்கு எதிலுமே ஈடுபாடு இல்லைதான். ஆனால் பணம் ஒன்று தான் குறிக்கோள். தமிழக மக்களுக்கு ஒரு துரும்பையும் கிள்ளி போடாதவன்.
ரஜினி விசயத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியது தி.மு.க குடும்பத்தைப் பற்றி. பதில் சொல்ல வேண்டியவர்கள் தி.மு.க,திமுக குடும்பத்தினர். இவர் ஏன் அவர்களுக்காக முட்டுக் கொடுக்கிறார்? இவர் என்ன தி.மு.க குடும்பமா? தி.மு.கவின் தூத்துக்குடி பெரியசாமிக்கு கலைஞரின் முரட்டு பக்தர் என்ற ஒரு பெயர் உண்டு. அதே போல் மாற்றுக் கட்சியாக இருந்தாலும் இவருக்கு ஸ்டாலினின் முரட்டு அடிமை என்ற பட்டத்தை தாராளமாக கொடுக்கலாம்!
தன் செல்வாக்கை காட்டத்தானே 'தமிழ்நாட்டை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். இப்போது ஆண்டவன்தான் காப்பாற்றுகிறாரா? தமிழ் எதிலெல்லாம் சிறந்து விளங்குகிறது, எதில் மிகக்கேவலமாக உள்ளது என்பது உலகறிந்த இரகசியம்.ஏன் இப்போது வாயடைத்து விட்டது? ரொம்ப நல்லவரோ?

தாங்களும் பதவி வெறி ஜாதி வெறி ஆகியவற்றை விட்டு விடலாமே