Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஸ்டாலினுக்காக ஓட்டு போடுவேன்

ஸ்டாலினுக்காக ஓட்டு போடுவேன்

ஸ்டாலினுக்காக ஓட்டு போடுவேன்

மு தல்வர் ஸ்டாலினுக்காக கடந்த முறையும் தி.மு.க., கூட்டணிக்குத் தான் ஓட்டு போட்டேன். இந்த முறையும் ஸ்டாலினுக்காக தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவேன். அவரது ஆட்சி சிறப்பாக இருக்கிறது. சட்டம் -- ஒழுங்கைப் பொறுத்தவரை ஒருசில விஷயங்கள் சரியாக உள்ளன. மகளிருக்கான இலவச பஸ் பயணம், மகளிர் உரிமை தொகை, கல்லுாரி மாணவியருக்கான திட்டம் என பெண்களுக்கான திட்டங்கள் சிறப்பாக உள்ளன. இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் யாரும், இதுபோன்ற திட்டங்களை கொண்டு வந்ததில்லை.

தி.மு.க., மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை தந்ததை முன்மாதிரியாக வைத்து, மற்ற கட்சிகள் அத்தொகையை கூடுதலாக்கி அறிவிக்கின்றனர். இதற்கு முன் ஆண்ட அ.தி.மு.க., இத்திட்டத்தை ஏன் அறிவிக்கவில்லை? தி.மு.க., கொண்டு வந்த திட்டத்தை ஏளனம் செய்துவிட்டு, இப்போது தேர்தல் வந்தவுடன் அதே திட்டத்தை கொண்டு வர நினைக்கின்றனர்.

அவர்கள் செய்த ஊழலைச் சொல்வதால், எதிர்க்கட்சியினர் ஸ்டாலினை குற்றம்சாட்டுகின்றனர். அவ்வளவு தான்.

ஷேக் முகமது, 25 தனியார் நிறுவன ஊழியர், மதுரை

Advertisement