விஜய் ரசிகை இல்லை; அவருக்குத் தான் ஓட்டு!
ஜீவிதா, 26ஐ.டி., நிறுவன ஊழியர், திருப்பூர்
நான் சென்னையில ஐ.டி., கம்பெனியில வேல பண்றேன். மூணாவது தடவையா ஓட்டுப்போட போறேன்.
புதுசா ஒரு கட்சி, மாற்றம் வரணும்னு நினைக்கிறேன். அதுக்காக இந்த தடவை, விஜய்க்கு ஓட்டுப் போடலாம்னு இருக்கேன். அதுக்காக நான் விஜய் ரசிகையெல்லாம் கிடையாது.
என் முதல் ஓட்டு, கமல் கட்சியின் 'டார்ச் லைட்' சின்னத்துக்கு போட்டேன். அடுத்ததாக, சீமான் கட்சிக்கு. துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு போயிருக்கேன். அதோடு ஒப்பிடும்போது, பாதுகாப்பு விஷயங்கள்ல நாம இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கணும்னு தோணும்.
இப்போ, கோவை, திருப்பூர் பக்கம் திருட்டு, கொலை சம்பவம் நிறைய நடக்குது; பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அங்கங்க நடக்குது; இதெல்லாம் சரி பண்ணணும். நான் வேல பார்க்குற இடத்துல ரோடு, பராமரிப்பில்லாம மோசமா இருந்துச்சு; எலக் ஷன் வருதுங்கற காரணத்துக்காக ஒரே நைட்ல அத சரி பண்றாங்க.
இதை ஏன், அஞ்சு வருஷமா பண்ணலைங்கற கேள்வி வருது. பொதுவா நான் எந்த கட்சிக்கும், ஆதரவோ எதிர்ப்போ இல்ல.
Advertisement
நீ ரசிகரா இரு இல்லாம போ டோன்ட் வேஸ்ட் யுவர் valuable வோட்டை NDA கூட்டணிக்கு போடு இது அட்வைஸ் DVK ஒரு கடிவாளம் இல்லாத நொண்டி குதிரை

நீ கட்சி சார்பா இரு இல்லாம போ. அது உன் இஷ்டம் . ஓட்டளிக்கும் பெரும்பாலோனர் எந்த கட்சியையும் சார்ந்து இருப்பதில்லை.
முதல் ஓட்டு கமலுக்கு. இரண்டாவது சீமானுக்கு .. இந்தமுறை விஜய்க்கு. ஆகமொத்தம் மூன்றுமுறை நீ போட்ட அத்தனை ஓட்டுகளும் வேஸ்ட்.