Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 பா.ஜ., 'சிட்டிங்' தொகுதிகளை கைப்பற்ற தி.மு.க., வியூகம்

 பா.ஜ., 'சிட்டிங்' தொகுதிகளை கைப்பற்ற தி.மு.க., வியூகம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ., வென்ற நான்கு தொகுதிகளை கைப்பற்ற, தி.மு.க., வியூகம் அமைத்து வருகிறது. அதை முறியடிக்க, பா.ஜ.,வும் தயாராகி வருகிறது.

கடந்த 2021 தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., நான்கு தொகுதிகளை கைப்பற்றியது. நாகர்கோவிலில் காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், கோவை தெற்கில் வானதி, மொடக்குறிச்சியில் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், 40 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ., விரும்புகிறது. நான்கு 'சிட்டிங்' தொகுதிகள் உட்பட, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும், அக்கட்சியை தோற்கடிக்க, தி.மு.க., தேர்தல் வியூகம் அமைத்துள்ளது.

தி.மு.க., அமைச்சர்கள் மீதான வழக்கு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை என, மத்திய பா.ஜ., அரசு அளிக்கும் குடைச்சலால், தி.மு.க., தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. எனவே, இம்முறை பா.ஜ.,வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கக் கூடாது என, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

அப்போது தான், தேசிய அளவில், பா.ஜ., செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தி, தி.மு.க., பலத்தை பறைசாற்ற முடியும். எனவே, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில், முடிந்தவரை தி.மு.க.,வே களமிறங்க முடிவு செய்துள்ளது. மேலும் பல வியூகங்கள் வகுக்கப் பட்டுள்ளன.

திருநெல்வேலி தொகுதியில், முக்குலத்தோர் சமுதாயத்தை விட, பிள்ளைமார் சமுதாய ஓட்டுகள் அதிகம். எனவே, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு எதிராக, பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவரை, வேட்பாளராக நிறுத்த, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.

கோவை தெற்கு தொகுதியில், தி.மு.க., மாணவரணி செயலர் ராஜிவ்காந்தி; நாகர்கோவில் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன்; மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதிக்கு எதிராக பேரூர் ஒன்றிய தி.மு.க., செயலர் சரவணன் என வேட்பாளர்களாக களமிறக்க, தேர்தல் வியூக நிறுவனம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, தி.மு.க.,வின் வியூகத்தை அறிந்துள்ள பா.ஜ., அதை முறியடித்து, அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், காய்களை நகர்த்த துவங்கி உள்ளது.

Advertisement

பிப் 16, 2026 02:02 pm

முதலில் உங்கள் தொகுதிகளை தக்க வைக்க பாருங்கள் .

Reply Rate this
பிப் 16, 2026 01:57 pm

திமுக பா ஜா வுக்குத்தான் போட்டியா ?

Reply Rate this
பிப் 16, 2026 09:19 am

நாகர்கோயில், கன்னியாகுமரி, விலகங்கொடு, திருநெல்வேலி, கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கௌண்டம்பாளையம், தியாகராஜநகர் சென்னை, மயிலாப்பூர் சென்னை, வேளச்சேரி சென்னை, உதகமண்டலம், காரைக்குடி ஆகிய இடங்களில் சரியான நல்ல வலுவான வேட்பாளர்களை நிறுத்தி வைத்தால், பிஜேபி வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.

Reply Rate this
பிப் 16, 2026 08:29 am

ஆட்சியையே தக்கவைத்ததில்லை, இதுல பாஜக சிட்டிங் தொகுதி வேற வேணுமாம்.

Reply Rate this
கொம்மா
பிப் 16, 2026 08:05 pm
Rate this
பிப் 16, 2026 08:02 am

ஜாதி பெயரையே ஒழிக்க வேண்டும் என திருட்டு வேஷம் போடும் தீயசக்தி ஜாதி பார்த்து வேட்பாளரை தேடுகிறது. ஊருக்கு உபதேசம் உனக்கில்லை?

Reply Rate this
பிப் 16, 2026 07:09 am

சிட்டிங் தொகுதிகளை எடுத்துக்கோங்க.... மீதி தொகுதிகளை பாஜக விற்க்கு கொடுத்துடுங்கோ.....

Reply Rate this