அதிகாரத்தில் பகிர்வு கேட்பது தவறு கிடையாது; சொல்கிறார் திருமா
திருச்சி: ''எங்களுக்கு இந்த முறை அதிகாரத்தில் பகிர்வு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அது ஒன்றும் தவறு கிடையாது'' என காங்கிரஸ் கோரிக்கை குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும்போது காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் உள்ளது. அதில் குழப்பம் இல்லை என்ற கருத்தை அழுத்தமாக கூறியிருக்கிறார்.
ஆகவே திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. கட்டுக்கோப்பாக இருந்தே தேர்தலை சந்திக்கும், நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்குவதிலும் அந்த கூட்டணியை பாதுகாப்பதிலும் அக்கறையோடு இருக்கிறோம். ஆகவே அந்த கூட்டணி எந்த வகையிலும், பாதிப்படைந்து விட கூடாது என்ற பொறுப்புணர்வில் விடுதலை சிறுத்தை கட்சி இருக்கிறது.
ஆட்சி அதிகாரம்
இண்டி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் ஏன் வெளியே போக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்படும். இது எல்லா கூட்டணியிலும் ஏற்படும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரம் கேட்கிறது. கொடுக்க முடியுமா? கொடுக்க முடியாதா என்பது குறித்து பேச்சுவார்த்தையில் தான் முடிவு செய்யப்படும். இப்படி கேட்பதால் ஒரு கூட்டணி உடைந்துவிடாது. கூட்டணி கட்சியில் இருப்பதால் உரிமையோடு கேட்கிறார்கள்.
உங்களுடைய வெற்றிக்காக நாங்களும் பாடுபடுகிறோம். இவ்வளவு காலமாக நாங்கள் உங்களுக்கு உழைத்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு இந்த முறை அதிகாரத்தில் பகிர்வு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது அது ஒன்றும் தவறு கிடையாது.
அழுத்தம்
தமிழக அரசியலுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பொருந்தி வராது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அடுத்த கட்டமாக அது பேச்சுவார்த்தையில் முடிவாகும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதால், ஒரு கூட்டணி உடைந்து விடாது. கட்டாயமாக திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும். இந்த கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களைப் போல் காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. அதேபோல் காங்கிரஸ் சொல்வதைக் கேட்டு ஒன்றாக அழுத்தம் கொடுக்கும் நிலையில் நாங்க இல்லை.
ஒரு அணியில்
நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கை என்னவென்றோ அதை பேச்சுவார்த்தையின் போதும் முன் வைப்போம். அதே நேரத்தில் இந்த கூட்டணியை உருவாக்குவதிலும், எங்களது பங்கு இருக்கிறது. அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது.
எனவே இன்றைக்கு எவ்வளவு இடம் கூடுதலாக ஒரு அணியில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, நாங்கள் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. இந்த கூட்டணியில் தான் நீடிப்போம். இந்த கூட்டணியில் எங்களுக்கான கோரிக்கை, என்னவோ அதை உரிமையோடு கேட்போம். பிரச்னை இல்லாத கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Advertisement
இவர் சொல்வது பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் என்பது போல் உள்ளது... கான் கிராஸ் கட்சி போல் எனக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க ஆசை தான்.... ஆனால் அப்படி கேட்டால்.... எங்கே அறிவாலயத்தில் கதவை அடைத்து... வெளியே விரட்டி விடுவார்களோ என்ற பயம் தான் நான் கேட்காமல் இருப்பதன் காரணம்...
பிளாட்டிக் சேர்ம் போச்சா... அப்போ தரையில் தான் உட்காரணும்..... ருமா அண்ண அதுக்கு அஞ்சமாட்டார்....
அய்யா, சாமி, நிரூபரே உமக்கு புண்ணியமா போகட்டும். எதுக்குங்க இவரோட பேட்டியை எல்லாம் செய்தியாக போட்டு எங்கள் ரத்தகொதிப்பை உருவாக்க பார்க்கின்ரீர்கள் . இவர் ஒருக்காலும் திமுகவை விட்டு விலகவே முடியாது. காரணம் கட்சியை பிளவுபடுத்த ஏற்கனவே திமுக தயாராக இருக்கிறது. அதனால் அடித்தாலும் கூட இவர் வெளியேறவே முடியாது. பேச்சிலே புலியாக சேருவார். உள்ளுக்குள்ளே அவர் எலி இருப்பார் . திமுகவை மாநிலமே தூற்றுகின்றது. இவர் என்னமோ திமுகவை முட்டுக்கொடுத்துக்கொண்டே பேசுகின்றார். போதும்யா இதோடு இவரை பற்றிய செய்திகளை நிறுத்துங்கள். இல்லை என்றால் உங்கள் மீது நானே வழக்கு தொடுப்பேன் என்று நிருபரை எச்சரிக்கின்றேன்
ஓட்டுக்கு தன் மக்களை தன்னை நோக்கி திசை திருப்ப வீசும் தூண்டில் … இது அவர் இருப்பை காட்டிக்கொள்ளும் டகால்டி பேச்சு ..
விருந்தில் பக்கத்து இலை காரர் பாயாசம் கேட்பதால்
நாமும் கேட்போம் என கேட்கிறார் திருமாவளவன்
மத்தியில் மட்டுமல்ல... மாநிலத்திலும் சுயாட்சி.. மாநிலத்திலும் கூட்டாட்சி..
காக்கைக்கு சோறு வைத்தால் நமக்கும் ஒன்றிரண்டு பருக்கைகள் கிடைக்காமலா போய்விடும்.
நீங்க தனியா நின்னு ஜெயிச்சி திமுக அதிகாரத்தில் பங்கு கேட்கும்போது தரமுடியாது என தைரியமாக சொல்லுங்க. இப்ப கொடுப்பதை வாங்கி கொண்டு அமைதியாக இருக்கவேண்டும். நடிகர் விஜய் இருக்கும் தைரியத்தில் திருமா காங்கிரஸ் கொஞ்சம் மிரட்டிப்பார்க்கிறார்கள்.

அதிகாரத்தில் பகிர்வு பற்றி பிறகு பேசலாம்.