'தி.மு.க., கூட்டணி ஆட்டம் காண்கிறது': இபிஎஸ்
- நமது நிருபர் -:
“தானாக பழுத்த கனிபோல், அ.தி.மு.க., கூட்டணி இனிமையாக, வலி மையாக உள்ளது. ஆனால், தி.மு.க., கூட்டணி ஆட்டம் காண்கிறது,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியில் உள்ள சத்தியமங்கலத்தில், பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., யாருக்கும் அடிமை இல்லை. எந்த இடத்தில் மேடை போட்டாலும், அங்கு முதல்வர் ஸ்டாலினுடன் விவாதம் நடத்த, தயாராக உள்ளேன். ஆனால், ஸ்டாலினிடமிருந்து இதுவரை பதிலே வரவில்லை. பொய் பேசி, விளம்பரப்படுத்தி கொள்ளும் பொம்மை முதல்வராக உள்ளார்.
இளமை காலத்தில் ஸ்டாலின் என்ன செய்தார்; அவருக்கு என்ன பெயர் என உங்களுக்கு தெரியும். எங்களை பற்றி பேச, அவருக்கு அருகதை இல்லை.
'தானாக பழுத்த கனி போல்' அ.தி.மு.க., கூட்டணி இனிமையாக, வலிமையாக உள்ளது. ஆனால், தி.மு.க., கூட்டணி ஆட்டம் காண்கிறது. 'ஆட்சியில் பங்கு' என்ற குரல் காங்கிரசில் இருந்து கேட்கிறது.
'கூட்டணியில் மரியாதை இல்லை என்றால், பதிலடி கொடுப்போம்', என காங்., -எம்.பி., மாணிக்கம் தாகூர் சொல்கிறார். அந்த கூட்டணி புகைய ஆரம்பித்து விட்டது; நிலைக்குமா என்று தெரியாது.
நம் கூட்டணி, பிரதமர் மோடி தலைமையில், பிரசாரத்தை துவக்கி விட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆட்சியை காப்பாற்ற பெரும்பான்மையை நிரூபித்தோம். அப்போது, ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வீதியில் நடந்தார்.
வரும் தேர்தலுக்கு பின், மீண்டும் அவர் அப்படிப்போகும் சூழல் ஏற்படும்.
நிரந்தர டி.ஜி.பி.,யைக் கூட நியமிக்க முடியாத, கேவலமான ஆட்சி நடக்கிறது. கஞ்சா போதையில் இருப்பவன், போலீசையே எகிறி அடிக்கிறான். இந்த மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்படுவதன் வழியே, ஐந்து ஆண்டில் 23,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க.,வின் ஊழல்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சிக்கு வந்தால், ஐந்து லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒரு லட்சம் காலி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.
ஸ்டாலின், தன் வீட்டு மக்களை பற்றிதான் சிந்திப்பார்; நாட்டு மக்களை பற்றி சிந்திக்க, அவருக்கு நேரமில்லை. இரவினில் ஆட்டம்; பகலில் துாக்கம் என, உதயநிதி வாழ்கிறார்.
வெள்ளை குடை ஏந்திய வீரனாக, அரசு நிகழ்ச்சிக்கு, பிரதமரை அழைத்து கவுரவப்படுத்தினார் ஸ்டாலின். தேர்தல் நெருங் கியதும் பிரதமர் மீது அவதுா று பரப்புகிறார்.
இதுதான் தி.மு.க.,வின் இரட்டை வேடம். தமிழக மக்களை கடனாளி ஆக்கிய தி.மு.க., அரசின் வரலாறை தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு மக்கள் பேசுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
Even admk workers are voting for admk.
Admk claims that they have 2 cr members. But so, far they have never got more than a cr votes.
so, we need to conclude that admk workers/members are not voting for admk.
தமிழ்நாடு அரசியலில் தடுமாறிக்கொண்டு இருப்பது அதிமுக எடப்பாடி பழனிசாமி.
உங்கள் கூட்டணிக்கு தலைவர் முடிவுகள் எடுப்பது யார் என்பதை தெரிவிக்க முடியுமா?

கூட்டணியே இன்னும் முடிவு செய்யத் தெம்பில்லை! தெமானமிகு 11 தடவை தோல்வி கண்ட மாவீரர் விருது தயார்!