Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 தமிழக பா.ஜ., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

 தமிழக பா.ஜ., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், வரும், 21ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இது குறித்து, அக்கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம், மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் கும்பலை தடுக்க முடியாமல், தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது.

இதை கண்டித்து, இளைஞரணி சார்பில், வரும், 21ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், கோவையில் எம்.எல்.ஏ., வானதி பங்கேற்க உள்ளனர்.

Advertisement