Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 அ.தி.மு.க.,வில் இணைந்தார் அழகிரி ஆதரவாளர் மன்னன்

 அ.தி.மு.க.,வில் இணைந்தார் அழகிரி ஆதரவாளர் மன்னன்

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் அழகிரி யின் ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மன்னன், அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தார்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஊழியராக இருந்த மன்னன், முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரியின் தீவிர ஆதரவாளர். கடந்த, 2006 முதல் 2011ம் ஆண்டு வரை, மதுரை மாநகராட்சி துணை மேயராக இருந்தார். ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்ட அவரது அண்ணன் அழகிரியை, 2014ம் ஆண்டில் கட்சியில் இருந்து, அப்போதைய தி.மு.க., தலைவர் கருணாநிதி நீக்கினார். அப்போது, மன்னன் உள்ளிட்ட பலரும் நீக்கப்பட்டனர்.

மீண்டும் தி.மு.க.,வில் இணைய, பல ஆண்டுகளாக மன்னன் முயற்சி செய்தும் நடக்கவில்லை. இந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், அக்கட்சியில் மன்னன் நேற்று இணைந்தார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டி:

மக்கள் பணி செய்ய எனக்கு ஆவல் அதிகம். அதை செய்ய தி.மு.க.,வில் அனுமதி மறுத்து விட்டனர். அதை பழனிசாமி நிறைவேற்றி இருக்கிறார். மதுரையில், தி.மு.க., தொண்டர்களை அடிமைபோல் நடத்துகின்றனர். அதற்கு முடிவுகட்ட, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். என்னை போல் மனக்குமுறல் கொண்ட தொண்டர்கள், லட்சக்கணக்கில் தி.மு.க.,வில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement