'தி.மு.க., ஊழல் செய்த பணம் மீட்கப்படும்'
சென்னை: ''தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, ஸ்டாலின் மருமகன் சபரீசன் செய்த ஊழல்களில், ஒரு ரூபாய் கூட விடாமல் மீட்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., சார்பில், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த குற்ற சம்பவங்கள் தொடர்பாக, 'குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு'-குற்றப்பத்திரிகை என்ற அறிக்கையை, சென்னை தி.நகரில் உள்ள, அக்கட்சி அலுவலகத்தில், நேற்று, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சருமான பீயூஷ் கோயல் வெளியிட்டார்.
தி.மு.க., ஆட்சியில் நடந்த, பாலியல் அத்து மீறல் வழக்குகள்; தி.மு.க., நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள்; சட்டம் ஒழுங்கு பிரச்னைகள்; தலைவிரித்தாடும் போதை கலாசாரம் உள்ளிட்ட ப ல பிரச்னைகள் குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு குற்றப்பத்திரிகையில் சொல்லப் பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பீயூஷ் கோயல் பேசியதாவது:
தி. மு.க., ஆட்சியில் குழந்தைகள், பெண்கள், எஸ்.சி., சமூகத்தினர், ஹிந்துக்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார் மீது ஸ்டாலின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தி.மு.க., ஆட்சியில், 'போக்சோ' வழக்குகள், 51 சதவீதம் அதிகரித்து, 6,969 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் உள்ளிட்டவர்களே, இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 'டாஸ்மாக்கில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,400 கொலைகள் நடந்துள்ளதுடன், 32 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ளனர்.
தி .மு.க., 2021 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில், 70 சதவீதம் நிறைவேற்றவில்லை. மிகப்பெரிய அளவுக்கு போதைப்பொருள் புழக்கம் உள்ளது. தமிழகத்தில் மக்கள் ஆதரவுடன், தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., ஆட்சியில், ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி செய்த ஊழல்களில், ஒரு ரூபாய் கூட விடாமல் மீட்கப்படும். விசாரணை நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
த.வெ.க.,வுக்கு தமிழக அரசியல், மக்கள் குறித்து எந்த புரிந்துணர்வும் இல்லை. விஜய், முதல்வர் பதவி குறித்து கனவு காண்கிறார். அவருக்கு வரும் கூட்டம், ஓட்டுகளாக மாறாது.
அவர் ஏற்கனவே தமிழக அரசியலில் இருந்த, நடிகர்கள் விஜயகாந்த், கமல் போன்றோர் நிலையில் இருப்பார். விஜய் கட்சி, அதிகபட்சமாக நான்கு சீட்டுகளுக்கு மேல் வெ ற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

ஆஹா பலே பலே ....இதை தான் எங்கள் ஜி 2014 ல இருந்து அடிச்சு விடுறார் ....ஆனால் இன்னும் மீட்டபாட்ட காணோம் ...கருப்பு பணம் அளவு அதிகம் தான் ஆகிட்டு போயிருக்கு ....