Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஓ.பி.எஸ்., ஏமாற்றி விட்டாரே? தி.மு.க.,வுக்கு தாவிய 'மாஜி' எம்.எல்.ஏ., வேதனை

 ஓ.பி.எஸ்., ஏமாற்றி விட்டாரே? தி.மு.க.,வுக்கு தாவிய 'மாஜி' எம்.எல்.ஏ., வேதனை

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த அய்யப்பன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்.

சட்டசபையில், முதல்வர் ஸ்டாலினே நெளியும் அளவுக்கு புகழ்ந்து பேசினார். தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் சேர்ந்தபோது, அய்யப்பனும் அக்கட்சியில் இணைந்தார்.

தனக்கு மீண்டும் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட, தி.மு.க., சார்பில் 'சீட்' கிடைக்கும் என காத்திருந்த நிலையில், அந்த தொகுதியை, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தி.மு.க., கொடுத்து விட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த அய்யப்பன், நேற்று செக்கானுாரணி அருகே தன் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, அய்யப்பன் கூறியதாவது:

கடைசி வரை கூட இருந்த எனக்கு, பன்னீர்செல்வம் கை கொடுப்பார் என நம்பினேன். தி.மு.க.,வில் இணையும் போது உசிலம்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் எனக்கேட்டேன். அவரும் சம்மதித்தார்.

எம்.எல்.ஏ.,வாக இருந்து, அவருடன் தி.மு.க.,வில் இணைந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு மீண்டும் 'சீட்' கொடுத்துள்ளனர். ஆனால், எனக்கு 'சீட்' தராமல், காங்கிரசுக்கு உசிலம்பட்டி ஒதுக்கப்பட்டது.

ஒரு கேப்டனாக, தொண்டனை கரை சேர்க்க, பன்னீர்செல்வம் தவறி விட்டார். ஆதரவாளர்களோடு ஆலோசித்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement