Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 2 முறை உறுதிமொழி

 2 முறை உறுதிமொழி

பல்லடம்: பல்லடம் தொகுதி த.வெ.க., வேட்பாளர் ராம்குமார், நேற்று மதியம், 12.00 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின் போது, உறுதி மொழியை வாசித்த இவர், இறுதியாக உறுதி கூறுகிறேன் என்று மட்டுமே கூறினார்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன், ஆண்டவன் மீது அல்லது உளமாற உறுதி கூறுகிறேன் என்றோ, ஏதாவது ஒன்றை கூறி, உறுதி கூறுமாறு அறிவுறுத்தினார். இதன்படி, ஆண்டவன் மீது உறுதி கூறுகிறேன் என,ராம்குமார் மீண்டும் உறுதிமொழி ஏற்றார்.

அவர் கூறுகையில், 'நான் வெற்றி பெற்று வந்தால் பல்லடம் தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வேன். இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள்எங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்கள் தலைவர் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். 30 முதல் 40ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,' என்றார்.

Advertisement