Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


பழனிசாமிக்கு பாடம் புகட்டினாரா பிரேமலதா?: தே.மு.தி.க., வருகையால் தி.மு.க., உற்சாகம்

பழனிசாமிக்கு பாடம் புகட்டினாரா பிரேமலதா?: தே.மு.தி.க., வருகையால் தி.மு.க., உற்சாகம்

சென்னை: 'தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்ததால், 200 தொகுதிகளில் வெற்றி என்ற முதல்வரின் முயற்சி எளிதாகும்' என, தி.மு.க.,வினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தே.மு.தி.க., உறுதியாக வரும் என எதிர்பார்த்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

வலிமையான கூட்டணி அமையும் என எதிர்பார்த்தவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்காமல் இருந்த தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள கூட்டணியான தி.மு.க., கூட்டணிக்கு வந்துள்ளார்.
ஈஷா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், முன்னாள் அமைச்சர் வேலுமணியோடு பிரேமலதா பங்கேற்றதை வைத்து, 'அ.தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வரும்; தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாகும்' என செய்தி பரவியது. இந்நிலையில், பிரேமலதா எடுத்த முடிவு, அந்தக் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைத்ததால், அந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அடுத்து 2019, 2020ம் ஆண்டுகளில், தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா 'சீட்' தருவதாக வாக்குறுதி அளித்து தரவில்லை. இது, தே.மு.தி.க.,விடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்ததன் வாயிலாக, தன்னை ஏமாற்றிய பழனிசாமிக்கு, பிரேமலதா பாடம் புகட்டியுள்ளார்.

சமீபத்தில் நடந்த தே.மு.தி.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், 60க்கும் அதிகமான மாவட்டச் செயலர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வரும் தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க., உள்ளது. எனவே, ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 8,000 ஓட்டுகளை வைத்துள்ள தே.மு.தி.க.,வை சேர்த்தால், இலக்கை எட்ட முடியும் என கணக்கு போட்டு, தி.மு.க., காய் நகர்த்தி உள்ளது. தே.மு.தி.க., வரவு, தி.மு.க., கூட்டணிக்கு பலம் சேர்த்துள்ளது.
வட மாவட்டங்களில் வலுவான பா.ம.க., இரண்டாக பிரிந்த நிலையில், புதிய கூட்டணியால், வட மாவட்டங்களில் மீண்டும் தே.மு.தி.க., வலுவடைவதோடு, தி.மு.க., கூட்டணிக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.
அதேபோல், தென் மாவட்டங்களில் மட்டும் ஓரளவுக்கு செல்வாக்குள்ள அ.ம.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அக்கட்சிக்கும், அ.தி.மு.க.,வின் பழனிசாமிக்கும் எதிரான மனநிலைக்கு சென்று, முக்குலத்தோர் ஓட்டுகளை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தே.ஜ., கூட்டணி, முக்குலத்தோர் ஓட்டுகளை முழுமையாக பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தென் மாவட்டங்களில் இருக்கும் நாயுடு சமூக மக்கள் மத்தியில் வலுவாக இருக்கும் தே.மு.தி.க.,வால், தி.மு.க.,வுக்கு அப்பகுதியில் கூடுதல் பலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய அரசியல் நிகழ்வுகளால், தே.மு.தி.க., தேய்ந்து போன நிலையில் இருந்து மாறி, மீண்டும் துளிர்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கூடவே, காங்கிரசால் சமீப காலமாக மனம் வெதும்பி இருந்த தி.மு.க.,வினர், தற்போது கூட்டணி வலுப்பெற்று விட்ட தெம்பில் உள்ளனர்.
தே.மு.தி.க., கூட்டணிக்கு துவக்கத்திலிருந்தே முயற்சி எடுத்து வெற்றி பெற்ற கனிமொழி போல, அ.தி.மு.க.,வில் எவ்வளவோ பேர் இருந்தும், யாரும் முயற்சி எடுக்காதது தி.மு.க.,வுக்கு பலம் தான். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

பிப் 20, 2026 09:52 pm

கொள்கையோ பழனிச்சாமிக்கு பாடமோ அல்ல.ஏலத்தில் திமுக அதிக தொகை கொடுத்தது.மற்றும் கல்லூரி விற்ற காசைத் தராமல் இழுத்தடிப்பு நடந்தது.அதுவும் வசூலாகிவிடும்.கூட்டிக் கழித்துப் பார்த்தால் ப்ரேமா அம்மையாரின் குடும்பம் செழுமையாகிவிடும்.நாடு எக்கேடு கெட்டால் என்ன. அடுத்த தேர்தலில் மதிமுக நிலைக்கு தேமுதிக வந்துவிடும்.

Reply Rate this
பிப் 20, 2026 06:21 pm

சீனா சீனிக்காயை அதிக விலை கொடுத்து வாங்கிய பாகிஸ்தான் பரட்டைத்தலை என்று வேண்டுமானால் மீம்ஸ் போட்டு புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்.

மதுரை மணவாடை வாங்கிய நல்லது ஒண்ணுத்துக்கும் உதவாத ஒரிஜினல் என்று வேண்டுமானால் போஸ்டர்கள் அடித்துக் கொள்ளலாம்.

Reply Rate this
பிப் 20, 2026 04:08 pm

நேத்து வரைக்கும் வேட்பு மனு வாங்க ஆள் இல்லைன்னு சொன்னீங்க... இப்ப என்னடாநா அப்படியே அறுத்து தள்ளிடுவீங்களோ

Reply Rate this
பிப் 20, 2026 02:51 pm

தொகுதிக்கு 500 ஓட்டு உள்ள தேமுதிகவை பேரம் பேசி ஒரு டிமாண்டை ஏற்படுத்தி ஏலத்தில் நடப்பது போல சாதுரியமாக திமுக தலையில் கட்டி விட்டார் எடப்பாடி. பலே கில்லாடி. திமுக கூட்டணி ஓட்டுகளை விஜய் சரி பாதியாக பிரிக்க, சுய பலமில்லாத எடப்பாடிக்கு முதல்வர் பதவி கனிந்து வருது.

Reply Rate this
பிப் 20, 2026 01:31 pm

2021 ல் அதிமுக 33% திமுக 36% தேமதிக 2% முக்கிய பங்கு தேர்தலில்

Reply Rate this
பிப் 20, 2026 12:25 pm

விருப்பமனு வாங்க கூட ஆள் இல்லாத கட்சியை திமுக சுமக்கப்போகிறது. தேவையற்ற சுமை என்றுதான் எடப்பாடி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இந்த பச்சை சந்தர்ப்பவாத கட்சி நிற்கும் இடங்களில் என் டி ஏ கூட்டணி ஜெயிக்கும்

Reply Rate this
பிஜேபி தன் சுய பலத்தில் நின்று ஜெயிக்காது போல. தனியே நின்று ஜெயிக்க வேண்டியது தானே? மோடி அலை+ஷாவின் "சாணக்யாத்தனம்" எல்லாம் நீர்த்து விட்டதா?
பிப் 21, 2026 06:16 pm
Rate this
பிப் 20, 2026 07:54 am

பேரம் படியவில்லை அதிக டிமான்டு வைத்தார் இந்த பேராசை பிடித்த பெண் அதன் விளைவை தேர்தலில் பார்ப்பார்

Reply Rate this
பிப் 20, 2026 07:38 am

தேசிய முற்போக்கு கூட்டணியில் எந்த பெரிய கட்சிகளையும் சேர்க்காமல் பழனிச்சாமியோடு நயினார் தனியாக கூட்டணி அமைத்து தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு பெரிய வீழ்ச்சியை தந்து வருகிறார். வெறும் வீர வசனங்களால் கோட்டையை பிடிக்க முடியாது என்பதை 2021 தேர்தலில் அடி வாங்கிய பிறகும் பழனிச்சாமி இன்னமும் இரண்டு கட்சி தலைவர்களின் காதில் பூ சுற்றும் வேலையை தைரியமாக செய்து வருகிறார்.‌ ஆனால் ஸ்டாலின் மிக வேகமாக - புத்திசாலிதனமாக- அரசு பணத்தில் தாராளமாக சலுகைகளையும் உரிமை தொகை என்ற பெயரில் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணத்தையும் கண்ணை மூடி கொண்டு வழங்கி வருகிறார். இன்னமும் அவரது கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிவரவில்லை. அதில் என்னென்ன உத்தரவாதம் தர போகிறார் என தெரியவில்லை. மற்றொரு புறம் விஜய் மக்களோடு முற்றிலும் தொடர்பு கொள்ளாத முடியாத வகையில் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி பலவித கட்டுபாடுகளை அவருக்கு அளித்து வருகிறார். இவை அணைத்தையும் பார்க்கும் போது தி.மு.க. கூட்டணி அவர்களே ஏதிராபார்க்காத வகையில் பெரிய வெற்றியோடு மீண்டும் ஆட்சிக்கு வர பழனிச்சாமி -நயினார் இருவரும் வழியை திறந்து விட்டார்களோ என தோன்றுகிறது.

Reply Rate this
இவர்கள் அப்புறம் தான். பிஜேபி தலைமையும் தமிழக பிஜேபியின் தமாஷும் போதுமே, திமுகாவை ஜெயிக்க வைக்க.
பிப் 21, 2026 06:13 pm
Rate this
பிப் 20, 2026 07:29 am

பாடம் புகட்டுவது பழனிச்சாமிக்கு

Reply Rate this
பிப் 20, 2026 06:32 am

கமல்ஹாசன் நிலை தான் ஏற்படும்.

Reply Rate this