Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தல்: திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியில் அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வரும் 16ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. 4 இடங்களை திமுக கைப்பற்றும், 2 இடங்களை அதிமுக கைப்பற்றும் அளவுக்கு இரு கட்சிகளுக்கும் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. 2 எம்பி பதவிகளை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேமுதிகவுக்கு திமுக வழங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள்.

இந்நிலையில் இன்று (மார்ச் 05) சென்னை தலைமை செயலகத்தில், அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பி பதவிக்கு தம்பிதுரை இபிஎஸ் முன்னிலையில் தம்பிதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார். பாமக தலைவர் அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
முன்னதாக, விஜயகாந்த் நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து சுதீஷ் ஆசி பெற்றார். முதல்முறையாக பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தை தேமுதிக பெறுகிறது.

Advertisement

மார் 05, 2026 10:18 pm

முன்னேறிய மாநிலத்தில் ஒரு கட்சியும் பெண்களுக்கு இடமளிக்கவில்லை. சமத்துவம் சமூகநீதி ஏமாற்றுப் பிரச்சாரத்துக்கு மட்டுமே

Reply Rate this
மார் 05, 2026 07:11 pm

சுதீஷ்-KKU பாராளுமன்றத்தில் எப்படி பேசுவதன்று தெரியாது. அமெரிக்காவில் எ ம்பிக்களுக்கு பென்ஷன் கிடையாது என்ற சட்டத்தை கொண்டுவரப்போகிறார்களாம். செலவைக்குறைக்க இதை செய்யப்போகிறார்களாம். இந்தியாவில் எப்படி?

Reply Rate this
மார் 05, 2026 03:39 pm

தேமுதிக திமுகவிடம் பிச்சையெடுத்து நிற்கிறது

Reply Rate this
Rajinikanth - Mylapore
அதிமுக பாஜகவிடம் எடுப்பது போலா?
மார் 05, 2026 05:17 pm
Rate this
மார் 05, 2026 01:57 pm

இவர்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் என்று மக்கள் கேட்பது புரிகிறது? 39 அங்கே வாழும் வாழ்க்கை பார்லிமென்ட் கான்டீன், சிக்கன் பிரியாணி, துண்டு சீட்டுடன், அல்லது அங்கே கலவரம் என்று பதவி காலம் முடிவடைகிறது என்பது தான் உண்மை.

Reply Rate this
மார் 05, 2026 01:28 pm

நானோ எனது குடும்ப உயிப்பின்சர்களோ எந்த பதவிக்கும் வரமாட்டோம். பிழைக்க தேரின் ந்தவர்கள். தமிழ் மக்கள் ஏமாளிகள்

Reply Rate this
மார் 05, 2026 01:19 pm

தே.மு.தி.க., இன்றுவரை எந்தவிதமான அரசியல் வம்பு வழக்குகள் பிரச்சனைகள் எதுவும் இல்லாத ஒரு அரசியல் கட்சி.. பிற்காலத்தில் அன்புமணியின் வாரிசாக மாறி B.J.P.க்கு Sadeesh தே.மு.தி.க கட்சியை அடகு வைப்பாரா இல்லை விற்று விடுவாரா?

Reply Rate this
மார் 05, 2026 01:01 pm

தம்பி அன்புமணி கெட்டிக்காரர். சட்டசபைக்கு நின்று மண்ணை கவ்வி என்ன பயன், கிடைத்த ஒரு சீட்டில் நின்று ஆறு வருஷம் வாழ்ந்து விடலாம் என்று முடிவு செய்து இறங்கி விட்டார். வாழ்த்துக்கள்.

Reply Rate this
மார் 05, 2026 12:39 pm

என்டிஏ கூட்டணி மிகவும் பலமாக உள்ளது .. ஸ்டாலின் பகல் கனவு கான்கிறார்...

Reply Rate this
என்ன SELF தான் எடுக்கலை
மார் 05, 2026 01:49 pm
Rate this
மார் 05, 2026 12:33 pm

காங்கிரஸ் இல் துரோகி பிரவீன் சக்ரவர்திக்கு கொடுக்க கூடாது என்றுகண்டிஷன் போட்டதால் அந்த வீணணக்கு காங்கிரஸ் இல் கொடுக்க வில்லை , அவன் இனி TN இல் MP ஆக வாய்ப்பே இல்லை

Reply Rate this
மார் 05, 2026 12:27 pm

no one will vote in the election, what is the use of democracy , WE SHOULD UNDERSTAND AND CHANGE US

Reply Rate this