Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 இலவசங்களுக்கு மக்கள் மயங்கி கிடப்பதா: பாரிவேந்தர்

 இலவசங்களுக்கு மக்கள் மயங்கி கிடப்பதா: பாரிவேந்தர்

கடலுார்: தமிழகத்தில் ஊழல், கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது என ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் பேசினார்.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பாசாரில், ஐ.ஜே.கே., 4வது மாநில மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பேசியதாவது:

பெரம்பலுார் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். தொகுதிக்கு என்னவெல்லாம் செய்தோம் என்பதை அறிந்திருக்க வேண்டும். 1,500 மாணவர்களை இலவசமாக படிக்க வைத்தோம். இந்திய ஜனநாயக கட்சி சார்பில் 3வது மாநாடு, விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடாக நடந்தது.

மாநாடு சிறப்பாக அமைந்துள்ளதாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், அக்கட்சி எம்.பி., இளவரசன் கூறினார்.

'பாரிவேந்தரை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வர வேண்டும்; அவரை விட்டு விடாதீர்கள்; 4 அல்லது 5 சீட் தரத் தயாராக இருக்கிறேன்' என்று ஜெயலலிதா கூறியதாக இளவரசன் கூறினார்.

மாநாடு நடத்துவது என்பது சாதாரண காரியமல்ல. அது, எந்தளவுக்கு அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, அரசியல் ரீதியிலான மாநாடு என்பது தோழமை கட்சிகளுக்கு பலத்தை நிரூபிக்க நடத்தப்படுவதாகும்.

தமிழகத்தில் ஊழல், கொள்ளை, கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாடு இதே நிலையில் சென்று கொண்டிருந்தால், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைப்பது கடுமையானதாகும். 'மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை, எவ்வளவு உயர்ந்தாலும் பரவாயில்லை' என, மக்கள் நினைக்கின்றனர். அதனாலேயே, இலவச திட்டங்களுக்கு மயங்கி கிடக்கின்றனர். மக்களின் இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement