Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 'தி.மு.க., கூட்டணியில் கட்சிகளுக்கு மரியாதை இல்லை'

 'தி.மு.க., கூட்டணியில் கட்சிகளுக்கு மரியாதை இல்லை'

கோவை: தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்., உட்பட கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை, என, த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட பொதுக்கூட்டம், கோவை மலுமிச்சம்பட்டியில் நடந்தது.

த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் பேசுகையில், ''தற்போதைய ஆட்சியில், கொலை, கொள்ளை அதிகரித்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதை மாற்றுவதற்கு, விஜய்யால் மட்டும் தான் முடியும். விஜய், தமிழகத்தை ஆளப்போகிறார். தமிழகத்தை உலகளவில் சிறக்கும் படி படைப்பார்,'' என்றார்.

தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: அரசியல். த.வெ.க., தலைவர் விஜய் சுற்றுப்பயணம் ஆரம்பித்த போதே, தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு விட்டது. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்., உட்பட கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. தங்கள் குடும்பம் மட்டும் தான் அதிகாரத்துக்கு வர வேண்டும் என, தி.மு.க., நினைக்கிறது. ஆனால், ஆட்சி நிர்வாகம் பூஜ்ஜியமாக இருக்கிறது.

தமிழகத்தில், பெண்கள் ஆதரவு, த.வெ.க.,வுக்கு அதிகரித்து வருகிறது. தமிழக மக்களின் வாழ்க்கையை மாற்றத்தான் விஜய் வருகிறார். இவ்வாறு, அவர் பேசினார். கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், மாவட்ட செயலாளர்கள் சம்பத், யுவராஜ், ராஜ்குமார், பாபு, செயலாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங் கேற்றனர்.

Advertisement

பிப் 09, 2026 04:53 pm

ஊழல் அம்பலம் ஆகிவிட்ட்து.. மிக கேகேவலமாக மக்களை ஏமாத்திவிட்ட்னர். மக்கள் விழித்து கொழ்வது nallathu.

Reply Rate this
பிப் 09, 2026 10:22 am

உனக்கு கூட்டணிக்கு கட்சியே இல்லையே

Reply Rate this
பிப் 09, 2026 07:08 am

அவனுவலோட கூட்டணியிலா இருகானுவோ.. அச்சச்சோ கொத்தடிமைகளாத் தானே இருகானுவோண்ணு என்று தமிழன் நிணைத்து கொண்டு இருகான்...

Reply Rate this