/ செய்திகள் / அமித் ஷாவிடம் நெருக்கமானோர் வைத்த கோரிக்கை

அமித் ஷாவிடம் நெருக்கமானோர் வைத்த கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு திருச்சி வந்தார். தமிழகத்தில் வசிக்கும் தனக்கு நெருக்கமானவர்களுடன், தேர்தல் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, 'சட்டசபை தேர்தலுக்காகவே, தி.மு.க., அரசு 1.31 கோடி மகளிருக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கி உள்ளது. கூடவே, 'தேர்தலுக்கு பின், மாதம் 1,000 ரூபாய் என்பது 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது மக்களை ஈர்த்துள்ளது. மத்திய அரசின் சார்பிலும், 'தமிழக மக்களை ஈர்க்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்; அது, பா.ஜ., கூட்டணிக்கு பலம் சேர்க்கும்' என அமித் ஷாவிடம், அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ஆகுயர்த்தோன்
பிப் 15, 2026 13:25

ஸ்டாலின் ஓட்டுக்காக 5000 கொடு விட்டார் என்று பேச்சு சரி ஏன் உங்களிடம் CAG சொன்ன 765000000 கோடி இருக்கே அதில் ஆளுக்கு 10000 நீங்க கொடுங்க , வெற்றியை மாற்றி காட்டுங்கள்


S. Venugopal
பிப் 15, 2026 12:18

ப ஜ க வின் தொண்டர்களும் மக்களும் நல்ல ஆட்சி வேண்டும் என்று நினைப்பதால் மற்ற மாநிலங்களிலும் மத்திய அரசிலும் ப ஜ க வை ஆட்சி பீடத்தில் அமார்த்தியுள்ளார்கள் என்பது யதார்த்தமான உண்மை. எதைச்செய்து வேண்டுமானாலும் ஆட்சியை குறுக்கு வழிகளை கையாண்டு கைப்பற்ற நினைக்கும் பதவி வெறி பிடித்த தலைவர்களை உண்மையான கட்சித் தொண்டர் விரும்ப மாட்டார் என்பதினை தமிழகத்தில் தொண்டர்களே இல்லாமல் அவதிப்படும் ஒரு கட்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். தமிழக மக்கள் நல்லது கெட்டது அறிந்து அவற்றில் மிகையானதை வைத்து வாக்களிக்கக் கூடியவர்கள். வர தேர்தலில் எஸ் ஐ அர் மூலம் கள்ள ஒட்டு என்ற ஒரு அகலமான குறுக்குவழி அடைக்கப்பட்டது. பண பலமும் குறுக்கு வழியும் நிரந்தர வெற்றிக்கு உதவாது என்பதினை கடந்த பல தேர்தல்கள் நிரூபித்துள்ளன.


சத்யநாராயணன்
பிப் 15, 2026 10:23

கண்மூடித்தனமான கவர்ச்சி விளம்பரங்களால் மட்டும்தான் தமிழகத்தில் என் டி ஏ ஆட்சியை அமைக்க முடியும் என்ற சிறுமதி படைத்தவர்களின் ஆலோசனையை கேட்டு தான் அமித்ஷா செயல்பட போகிறார் என்றால் அவர் டெல்லியிலேயே இருக்கட்டும் அண்ணாமலை என்ற வெளிச்சத்தை அணைத்துவிட்டு இருட்டில் ஆட்சி கட்டிலை தேடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு


vbs manian
பிப் 15, 2026 09:14

ப ஜெ கா செய்த மிகப்பெரிய தவறு அண்ணாமலையை ஓரம் கட்டியது.தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் ப ஜெ கா வை கொண்டு சேர்த்தவர். இதே போன்று தெலங்கானாவில் பாண்டி சஞ்சய் என்று அயராது உழைத்தவரையும் தள்ளி வைத்தனர். எப்படி கட்சி வளரும்.


Svs Yaadum oore
பிப் 15, 2026 09:06

காசு கொடுத்தால் உடனே வோட்டு விழுந்துடுமா? இந்த 5000 ஆயிரம் ரூபாய் செலவுக்கு ஐந்து நாட்கள் நாட்கள் கூட காணாது ..தேர்தலுக்கு இன்னும் அறுபது நாட்களுக்கு மேல் உள்ளது ..இங்கு எல்லா கட்சிகளும்தான் காசு கொடுக்குது .....இங்குள்ள லஞ்ச ஊழல் டாஸ்மாக் போதை கஞ்சா சட்டம் ஒழுங்கு சீரழிவு பற்றி தீவிரமாக பிரச்சாரம் செய்யனும் ....அதுக்கு அண்ணாமலைதான் வரனும் ....காசு கொடுத்தால் மட்டும் வோட்டு விழாது ....


Ms Mahadevan Mahadevan
பிப் 15, 2026 08:56

இன்று அரசியல் என்பது மக்கள் சேவை என்பது மாறி சம்பாத்தியம், பதவி பந்தா, அதிகார ஆணவம் என்ட்ரி ஆகி உள்ளது. எந்த அரசியல்வாதியும் சாகும் வரை ரிடையார் மென்ட் பெறாமல் அனுபவிக்க ஆட்சிக்கு வர துடிக்கிறான். பி ஜே பி யும் அப்படிதான். பி ஜே பி tamilnadu க்கு நல்லதல்ல


sundar
பிப் 15, 2026 08:56

அண்ணாமலை தலைவராகும் வரை பாஜக உருப்பட வாய்ப்பில்லை.


தாமரை மலர்கிறது
பிப் 15, 2026 08:41

ரெண்டு திமுக அமைச்சர்களை உள்ளே தள்ளினால், திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.


Palanisamy Sekar
பிப் 15, 2026 08:39

ஒரே ஒரு ஊழல் அமைச்சரை தண்டித்ததாலே போதும் திமுகவின் அத்தனை தில்லாலங்கடி வேலைகளும் ஒட்டுமொத்தமாக காணாமல் போகும். ஆரம்பம் முதலே சொல்லிவருவது திமுகவை ஊழல்களை வைத்துதான் ஒட்டுமொத்தமாக தண்டிக்க முடியும். அதனை செய்யாமல் போனால் திமுகவுக்கு படுகுஷிதான். ஊழலால் சம்பாதித்த வைத்துள்ள பணத்தில் ஒரு சிறு பகுதியை வெளியே விட்டாலே திமுக அதிக மெஜாரிட்டியில் வெற்றி பெற்றிடும். அப்படி திமுக வெற்றிபெற்றால் அதற்கு முழு காரணமே பாஜகவின் ஒத்துழைப்புதான் என்று மக்கள் உறுதியாக பேசுவார்கள். அரசியல் செய்ய இந்திராகாந்தி போல செயல்பட வேண்டும் இல்லை என்றால் தமிழகத்தை மறந்துவிட வேண்டியதுதான் இந்த பாஜக


Gokul Krishnan
பிப் 15, 2026 10:21

ஊழல் அமைச்சர்களை பிஜேபி அரசு தண்டிக்க நடவடிக்கை எடுக்குமா. மிக பெரிய காமெடி. 2ஜி 2ஜி என்று கூவின பிஜேபி இது வரை தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்ய வில்லை செய்யவும் மாட்டார்கள் அண்ணாமலை கொடுத்த புகார்கள் தூங்கி கொண்டு இருக்கிறது. பிஜேபிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் போதும் அதன் பின் தேர்தல் வரும் போது மட்டும் பெயருக்கு உருட்டல் மிரட்டல் செய்யும்


பாலாஜி
பிப் 15, 2026 08:37

மத்திய அரசு தேர்தல் முதல் பிரச்சாரத்தின்போது நரேந்திரமோடி அறிவித்த வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்


sundar
பிப் 15, 2026 08:54

திருட்டு பதுக்கியது தானே


மேலும் செய்திகள்