Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


சூப்பர் பாஸ்ட் இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; திருப்பத்தூர் மாநாட்டில் ஸ்டாலின் பெருமிதம்

சூப்பர் பாஸ்ட் இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது;  திருப்பத்தூர் மாநாட்டில் ஸ்டாலின் பெருமிதம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி குறைந்தது, இரண்டரை கோடி ஓட்டுகளைப் பெற, ஓய்வின்றி உழைக்க வேண்டும்,'' என, கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

திருப்பத்துாரில், நேற்று நடந்த, தி.மு.க., வடக்கு மண்டல ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில், அவர் பேசியதாவது:



இந்தியா முழுக்க எந்த 'டிரண்ட்' இருந்தாலும், தமிழகத்தின் நிரந்தர 'டிரண்ட்' கருப்பு சிவப்புதான்.

வரும் தேர்தலில், குறைந்தது 2.50 கோடி ஓட்டுகளை பெற்றாக வேண்டும். நேற்று முன்தினம் மகளிர் உரிமைத் தொகை பெறும், 1.31 கோடி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில், 5,000 ரூபாய் வரவு வைத்துள்ளோம். தேர்தலை காரணம் காட்டி, பா.ஜ.,வை சேர்ந்தவரை வைத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இத்திட்டத்தை நிறுத்த சதி செய்தனர்.

தமிழகத்திற்காக பேச துணிவில்லாமல், கொத்தடிமை சாசனம் செய்யும் பழனிசாமி, எனக்கு சவால் விட்டுள்ளார். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அடையாளமாக இருப்பவர் பழனிசாமி. சசிகலா காலில் விழுந்து பதவி பெற்று, அவரது காலையே வாரி விட்டவர்.
ஊழிலின் ஊற்றுக் கண்ணான, அ.தி.மு.க.,வின் பாரம்பரியத்தை காக்க, உறவினர்களுக்கு டெண்டர்கள் அள்ளிக் கொடுத்தவர் பழனிசாமி. அவதுாறுகளால் தி.மு.க., அரசை களங்கப்படுத்த நினைக்கும், அவரது பேச்சை மக்கள் நம்ப மாட்டார்கள்.

பா.ஜ.,வின் டப்பா இன்ஜின் முன்னால், தி.மு.க.,வின் சூப்பர் பாஸ்ட் இன்ஜின், ஒருபோதும் தலைகுனியாது. மக்களை சந்திக்கும்போது, பா.ஜ., அரசின் துரோகங்களையும் சொல்ல வேண்டும். புறவாசல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய நினைக்கும், பா.ஜ.,வின் எண்ணத்தை தடுக்க வேண்டும். பழனிசாமி தலைமையை, அவருடைய கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை.
எல்லோரும் ஒரிஜினல் முதலாளியான, பா.ஜ.,விடம் நேரடியாக சரணடைகின்றனர். அ.தி.மு.க., என்பது பா.ஜ., பயணிக்க உதவும் கிளை என்பதை, மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரையே மாற்ற துடிப்பவர்கள், தமிழகத்திற்குள் வந்தால் எப்படி இருக்கும் என்பதை, மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க.,வில் நிலோபர்


கடந்த சில ஆண்டுகளாக, அரசியல் நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், நேற்று கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார். பின், திருப்பத்துாரில் நடந்த தி.மு.க., மாநாட்டிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

ரூ. 5,000 வந்ததா; ஸ்டாலின் விசாரிப்பு சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின், நேற்று ரயிலில் ஜோலார்பேட்டை சென்றார். அங்கிருந்து காரில் திருப்பத்துார் சென்றார். வழியில் தாமலேரிமுத்துாரை சேர்ந்த,மேகலா என்பவர் வீட்டிற்கு சென்றார். அவரிடம், தமிழக அரசு கொடுத்த 5,000 ரூபாய் வந்து விட்டதா எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த பெண், 'மாதந்தோறும் 1,000 ரூபாய், கல்லுாரி படிக்கும் மகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் வருகிறது. லேப்டாப்பும் வந்துள்ளது' என்றார். அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில், முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். ***

Advertisement

பிப் 15, 2026 05:54 pm

சூப்பர் பாஸ்ட் என்ஜின் என்ன? வயசுக்கு வந்த பொண்ணா? வெட்கப் பட்டு தலை குனிய?

Reply Rate this
பிப் 15, 2026 05:29 pm

ஆமை புகுந்த வீடாக தமிழகம் உள்ளது. திமுக தான் அந்த ஆமை.

Reply Rate this
பிப் 15, 2026 04:45 pm

செங்கோலை கிண்டல் செய்த கொள்ளை கூட்ட திராவிடம் அதே செங்கோலை மக்கள் மத்தியில் பிடித்து போட்டோ சூட் எடுப்பது அந்த முருகனின் திருவிளையாடல்.

Reply Rate this
பிப் 15, 2026 12:43 pm

சூப்பர் பாஸ்ட் இன்ஜின் கொண்ட வாகனம் ஆனாலும் அதை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் வரும் என்பதில் சந்தேகமில்லை

Reply Rate this
பிப் 15, 2026 11:55 am

ஒருவர் ஒருகாலத்தில் ஒரு குழந்தையை தான் பெற்றடுத்த மகளே இல்லை என கோர்ட்குச் சென்றார்.

Reply Rate this
பிப் 15, 2026 09:05 am

மோடி அன்று நிறுவிய பண்டைய தமிழகத்தின் செங்கோலை இழிவாகப் பேசின போலி திராவிடம் இன்றைக்கு செங்கோலை கையில் ஏந்திக்கொண்டு காட்சிதரும் மர்மம் என்ன. நாங்களும் முடிசூடா மன்னர்கள் பரம்பரையில் வந்தவர்கள் என்று பறைசாற்றிக் கொள்ளுவதற்கா.

Reply Rate this
தனக்கு தேவை என்றால் பல் இளிக்க செங்கோலைப் பெற்றுக் கொள்வார்கள். அதே செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தால் அந்த வேற்று மொழிக் காரர் மதுரை எம்.பி சு.வெங்கடேசனை விட்டு சோழர்களையும் ,செங்கோலையும் இழிவு படுத்துவார்கள்.
பிப் 15, 2026 10:27 am
Rate this
பிப் 15, 2026 08:00 am

திமுகவின் முதல் உலகப் புகழ்வாய்ந்தது ஏற்கனவே தமிழகத்தை தலை குனிய வைத்து விட்டீர்கள் அதை நிமிர் வைப்பது அடுத்து வரும் ஆட்சி தான்

Reply Rate this
பிப் 15, 2026 07:53 am

எழுபத்தி ஐந்து வயசிலேயும் மனசுக்குள்ள பெரிய தெலுங்குபட ஹீரோன்னு நெனப்பு!

Reply Rate this
அவனுக உண்மையிலேயே ஓங்கோல் கொல்ட்டி பயலுகதான்...
பிப் 15, 2026 01:55 pm
Rate this
பிப் 15, 2026 07:41 am

எங்க மகாராஜா கூலிங் கண்ணாடியும், சூவ்வும் போட்டுதான் செங்கோலை இடதுகையால் தொடுவார். செங்கோலுக்கு தெய்வ மரியாதை தரும் மோடி தமிழ்விரோதி. என்ன திமுக ப்ரோ..வெரி ராங் ப்ரோ.

Reply Rate this
பிப் 15, 2026 07:10 am

அதிபுத்திசாலி... கனவுலகில் உள்ள முதல்வர் .

Reply Rate this
புரியவில்லை. எஞ்சின் எப்படி தலைகுனியும்.
பிப் 15, 2026 11:20 am
Rate this