Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம்; சீமான் குற்றச்சாட்டு

அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம்; சீமான் குற்றச்சாட்டு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ''லட்சக்கணக்கான கோடிகளை, மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம் போட்டே இப்படி செய்கின்றனர்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சீமான் கூறியதாவது: தி.மு.க., அரசு, மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில், திடீரென 5,000 ரூபாயை, வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. இது, தேர்தல் வருவதை கணக்கிட்டு, மக்களின் ஓட்டை பறிக்கும் சூழ்ச்சி. நீண்ட நாட்களாக திட்டமிட்டு, மிகவும் ரகசியம் காத்து, ஒரே நாளில், 1.31 கோடி பேரின் வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் செலுத்துவதில், தி.மு.க., அரசு நேர்த்தியாக செயல்பட்டுள்ளது.
இத்தனை கவனத்தையும் பொறுப்பையும், சட்டம் - ஒழுங்கை காப்பதில் காட்டவில்லை. பல அரசு துறை ஊழியர்கள் பணி பாதுகாப்பு, வாழ்வாதார பாதுகாப்புக்கு போராடி வருகின்றனர். நிதிநிலையை காரணம் காட்டி, அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசு, ஒரே நாளில், 6,500 கோடி ரூபாயை வாரி இறைக்கலாமா? லட்சக்கணக்கான கோடிகளை, மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம் போட்டே இப்படி செய்கின்றனர். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement

பிப் 15, 2026 05:13 pm

தீ மு காவின் முக்கிய கொள்கை திட்டத்தை இப்படி ஊரறிய பறைய்ய சாத்தலாமா?

Reply Rate this
பிப் 15, 2026 03:30 pm

திமுக ஒரு அனுபவமிக்க அரசியல் கட்சி. அவர்கள் கொடுத்த ருபாய் 5000 இல் ருபாய் 2000 மட்டும்தான் அதிகமாக கொடுக்கப்பட்ட பணம். ருபாய் 1000 தலா பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொடுக்கப் பட்ட வேண்டிய ஒன்று. திமுகக்காரர்கள் புத்தி சாலிகள் இன்னமும் அஞ்சு வருஷத்திற்கு 5000 கொடுத்தோம் 5000 கொடுத்தோம் என மக்களிடம் சொல்லி சொல்லியே ஒரு உண்மையற்ற நிகழ்வை உண்மை என நம்பும் படி ஆக்கி விடுவார்கள்.

Reply Rate this
பிப் 15, 2026 01:53 pm

கிறிஸ்தவ இசுலாமிய அமைப்புகள் தங்களை தமிழர்கள் என்றும் இந்தியர்கள் என்று சொல்லவே விரும்பவில்லை என்பதுதான் திமுகவின் சாதனை.

Reply Rate this
பிப் 15, 2026 01:50 pm

ஊழலை உரிமையாக்கிய கட்சி திமுக.

Reply Rate this
பிப் 15, 2026 01:22 pm

சரி CAG சொன்ன 76500000000000000000 கோடி இருக்கே , பிஜேபி உம ஆளுக்கு 5000 கொடுக்கலாம் இல்லையா தேர்தல் எதுக்கு அன்னே இது இல்லமல் தேர்தல் நேரத்தில் கவனிப்பு வேறு இருக்கு ஒரே பண மழைதான் ,2026 RESULT இன்றே சொல்லிவிட்டார்

Reply Rate this
பிப் 15, 2026 01:21 pm

2026 RESULT இன்றே சொல்லிவிட்டார் அப்புறம் தேர்தல் எதுக்கு அன்னே இது இல்லமல் தேர்தல் நேரத்தில் கவனிப்பு வேறு இருக்கு ஒரே பண மழைதான்

Reply Rate this
பல பெயர் மாற்றி பீட்டரிக்கொள்ளும் irunooru kothadimaigalவரிசையில் இன்னும் ஒரு kothadimai ஆகுயர்தோன்
பிப் 15, 2026 06:47 pm
Rate this
பிப் 15, 2026 01:19 pm

உனக்கென்ன தோற்போம் என்று தெரிந்தே வோட்டை பிரிக்க நோட்டு வாங்கும் பிஜேபி பி டீம் நீ ,உனக்கு இப்படி கோடி கோடியா செலவு செய்ய எங்கிருந்து பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது சொல் , திரள் நிதி இவளவு கோடியா வருது , கணக்கு காட்டு

Reply Rate this
பிப் 15, 2026 12:50 pm

திருநீறு பூசிய சைமன். திறமையாக பேசுகிறார். ஆனால் திராவிட மாயையில் மக்களிடம் சரியாக பேசினாலும் எடுபடவில்லை.

தமிழ்நாட்டில் அறிவு சார்ந்து சரியாக கேள்வி கேட்கும் ஒரு நபர். ஆடு மாடு அரசியலை தவிர.

Reply Rate this
பிப் 15, 2026 12:13 pm

அவர்களுக்கு கொள்ளையடிப்பது திட்டம் இவருக்கு உண்டியல் குலுக்கிக் கொண்டு இருப்பது திட்டம் இன்னும் 5 வருடங்களுக்கு

Reply Rate this
பிப் 15, 2026 10:54 am

மிக அருமையாக பேச்சுத்திறமை கொண்ட நீங்கள் செம்மட்டி அடி கொடுப்பது போல் இந்த கட்சியின் அவலங்கள், எப்படி மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை விளாவரியாக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி சொல்லுங்கள். வாக்காளர்கள் புத்தியில் உறைக்கட்டும், ஏமாந்தது போதும்.

Reply Rate this