Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டி!

காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டி!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டசபை தேர்தலில், காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன. நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த 2010ம் ஆண்டு முதல், அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்நிலையில், அக்கட்சியின் 234 வேட்பாளர்களையும், வரும் 21ம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் சீமான் அறிவிக்க உள்ளார். வேட்பாளர்கள் தேர்வு, 100 சதவீதம் முடிந்த நிலையில், சீமான், அவர் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 தேர்தலில், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 24.3 சதவீதம் ஓட்டுகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இம்முறை, அவரை வெற்றி பெற வைக்கும் நோக்கத்தில், கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, நா.த.க., பிரசாரத்தை மக்களிடையே எடுத்துச் செல்ல, 'எங்கள் தேசம்' என்ற 'யு டியூப்' சேனலை, சீமான் நேற்று துவக்கி வைத்தார். இதில், அரசியல் தாண்டி பொழுதுபோக்கு, தமிழ் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

பிப் 15, 2026 07:54 pm

விஜயலக்ஷ்மி போட்டி போடுவாரா?

Reply Rate this
பிப் 15, 2026 11:43 am

காரைக்குடி அவ்வளவு மோசமான தொகுதி ஒன்றும் கிடையாது பார்க்கலாம் ஒரு முட்டாளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று

Reply Rate this
பிப் 15, 2026 10:35 am

இவரது ஒரிஜினல் வண்டவாளம் தண்டவாளம் ஏறும்

Reply Rate this