Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தேர்தலை மனதில் வைத்தே ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளது திமுக; மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

தேர்தலை மனதில் வைத்தே ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளது திமுக; மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தேர்தலை மனதில் வைத்தே திமுக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: இன்றைக்கு தமிழகத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள், மிகப்பெரிய ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சகோதரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. நம்முடைய தாய்மார்கள் ரயிலில் போக முடியவில்லை.

ஒரு பைக்கில் கூட போக முடியாத சூழல், இருந்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கூட செயின் பறிப்பு, அவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக, தன்னுடைய ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்காக, இந்த 5 ஆயிரம் ரூபாய் வழங்கி ஆட்சி முடியும் நேரத்தில் நாடகத்தை முதல்வர் நடத்தி இருக்கிறார். அவர் 2021ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நான் ஆட்சிக்கு வந்த பிறகு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று கூறினார். ஆனால் மூன்று வருடம் அதைப்பற்றி எந்த கவலையும் இல்லை.

அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. ஆட்சி முடியும் நேரத்தில் வந்து நான் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். தற்போது தேர்தலை மையமாக வைத்து முன்கூட்டியே ரூ.5 ஆயிரம் கொடுக்கிறேன் என்று சொல்லி மிகப்பெரிய போலியான நாடகத்தை நடத்தி இருக்கிறார். இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Advertisement

பிப் 15, 2026 08:59 am

கோடை கால சிறப்புத் தொகுப்பு என்று பெயரிட்டு அவர்கள் கொடுத்ததைப் போல, நீங்களும் பாஜக குதூகல கவனிப்பு என்று பெயரிட்டு 10000 கொடுங்கள். அப்படியும் தோற்றுத் தான் போவீர்கள்.. ஏனெனில் வெற்றி என்பது உங்களுக்கு எட்டாக்கனி...

Reply Rate this
பிப் 15, 2026 08:49 am

எல்.முருகன் கருத்துப்படி தேர்தலுக்காக முதலமைச்சர் தந்திருப்பதாக கருதினாலும் வெளிப்படையாக செய்துள்ளார். பிற கட்சியினர் செய்வதுபோல ரகசியமாக தமிழக வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள், ரொக்கம் தந்துகொண்டிருக்கவில்லை.

Reply Rate this
பிப் 15, 2026 06:54 am

அப்போ பிகார் தேர்தலின் பொது பிஜேபி வாக்காளர்களுக்கு ரூ. 10,000/பத்தாயிரம் கொடுத்ததே அது என்ன ...?

Reply Rate this
பிப் 15, 2026 06:09 am

குற்றம் சாட்டுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக மத்திய அரசின் சார்பிலும் ஒரு குறிப்பிட்ட பெரிய தொகையை தமிழக மக்களுக்கு கொடுங்களேன்... அதை எந்த பெயரில் நீங்கள் கொடுத்தாலும் பரவாயில்லை. ... மக்களுக்கு கவனிப்பு முக்கியமேயன்றி, அதை யாரும் வேண்டாமென்று சொல்லப் போவதில்லை...

Reply Rate this
பிப் 15, 2026 04:31 am

நீ எல்லாம் அமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர்.

Reply Rate this
பிப் 15, 2026 02:01 am

இதையே பீகாரில் செய்தால் பெண்கள் முன்னேற்றம் தமிழ்நாட்டில் செய்தால் தேர்தல் அரசியல் தனக்கு வந்தால் ரத்தம், மத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா? எல்லா கட்சியும் தேர்தலில் செய்யும் எத்திக்ஸ் இது

Reply Rate this
பிப் 14, 2026 10:54 pm

பீகாரைப் போல இங்கு ஸ்டாலின் செய்து இருக்கிறார் வேறென்ன??

Reply Rate this
பிப் 14, 2026 10:53 pm

ஹா ஹா ..காமெடி .. நோட்டா தான் ..

Reply Rate this