/ செய்திகள் / தென் மாவட்டங்களில் சீட் கேட்கும் வி.சி.,

தென் மாவட்டங்களில் சீட் கேட்கும் வி.சி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களை போல தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்து உள்ளது. தி.மு.க., கூட்டணியில், அப்பகுதியில் 'சீட்' பெறவும் அக்கட்சி முயற்சித்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டில் இருந்து சட்டசபை தேர்தலை சந்தித்து வரும் வி.சி., கட்சி, ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது. பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்த நிலையில், கடந்த இரு தேர்தல்களில், இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்களை பெற்றதன் வாயிலாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து வரும் வி.சி., அக்கூட்டணியில் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில், வட மாவட்டங்களில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வென்றது. வரும் சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் போட்டியிட, தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் வி.சி., வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, வி.சி., செய்தி தொடர்பாளர் பாவலன் கூறியதாவது: எங்கள் கூட்டணியில், தி.மு.க.,வுக்கு அடுத்து பெரிய கட்சியாக வி.சி., உள்ளது. மேலும், பல ஆயிரம் நிர்வாகிகளை கொண்ட கட்சியாகவும் வளர்ந்துள்ளது. அனைத்து கிராமங்கள் மற்றும் தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு பொறுப்பாளர்கள் உள்ளனர். எனவே, கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவோம். குறிப்பாக, தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் எங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளின் பட்டியலை தயாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

surya krishna
பிப் 06, 2026 07:52

இவனெல்லாம் அரசியல் தலைவன் அல்ல அடியாள்களின் தலைவன் எந்தப் பகுதியில் நின்னாலும் இந்த கூட்டத்தை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்


Rathna
பிப் 05, 2026 16:17

விஷ சக்திகள் மற்றும் பிரிவினை சக்திகள் வளர்வதை கூட்டணி மூலம் சேர்ந்து கொண்டு மாறு வேடத்தில் மக்களிடம் வோட்டு வாங்குவதை மக்கள் தடுக்க வேண்டும்.


V Venkatachalam, Chennai-87
பிப் 05, 2026 12:15

கூட்டணியில் இருக்குறே ன்னு சொல்லி கிட்டு இருக்குற கான்+கிராஸ்காரனுங்களுக்கு இருக்குற செம தைர்யம் எங்களுக்கும் இருக்கு. அதை இருக்குன்னு காமிச்சுட்டா அது கொள்ளிக்கட்டையால தலையை சொரிஞ்சு கொள்றதுக்கு சமம்..முன்னாடியே எங்க துண்டன்கள் குண்டன்களை வைத்து வருங்கால முதன் மந்திரின்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கோம்.‌ நியாயமா எங்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரத்தில் பங்குங்குற கோஷத்தை கான்+கிராஸ் கையில் எடுத்துடுச்சி. அதுனால தெற்கு மேற்கில் தொகுதிகள் வாங்குவோம். ஜெயித்து வந்துட்டா ஆட்சியில பங்கு வாங்குவோம். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும். முகஸ் ரொம்ப வீக்காதான் இருக்காரு என்பதுதான் கள நிலவரம்..


கூத்தாடி வாக்கியம்
பிப் 05, 2026 12:12

வட மாவ்டங்களில் ..... தென் மாவட்ட சீட் கேட்குது.


duruvasar
பிப் 05, 2026 10:51

தைரியம் இருந்தால் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் ஏதாவது ஒரு பொது தொகுதியில் குருமா நிற்கவேண்டும்.பார்க்கலாம் அவருடைய மிடுக்கை கோழை.


Madras Madra
பிப் 05, 2026 10:19

இந்த முறை எங்க நின்னாலும் ஆப்பு தான்


Rameshmoorthy
பிப் 05, 2026 09:49

Poison should be treated not allow to spread


Raja k
பிப் 05, 2026 09:11

தென்மாவட்டத்தில சீட் கேட்குறளவுக்கு தென்மாவட்டங்களில் உங்க கட்சி சாதி வளர்ந்துவிட்டதா? அல்லது அங்கும் உங்க சாதீ மூட்டி குளிர்காய நினைக்கிறேளா,


T.Senthilsigamani
பிப் 05, 2026 07:53

அமைதிப்படை புகழ் அமாவாஸ்யை என்ற நாகராஜ சோழனுக்கு ஒரு சீட் பார்சல் நம்ம குருமா விசிக வில்