ஜெயகுமாரை நம்பலாமா: திகிலில் ராயபுரம் மனோ
வடசென்னை அ.தி.மு.க., வேட்பாளராக, ராயபுரம் மனோ என்ற மனோகர் போட்டியிடுகிறார். இவர், காங்., முன்னாள் வடசென்னை மாவட்ட தலைவராக இருந்தவர்.
2011 சட்டசபை தேர்தலில், ராயபுரம் தொகுதியில், அ.தி.மு.க.,வில் ஜெயகுமார் - காங்கிரசில் மனோகர் போட்டியிட்டனர். அதில், ஜெயகுமார், 8,031 ஓட்டுகள் வித்தியாசத்தில் மனோகரை வென்றார்.
2016லும் 21,372 ஓட்டுகள் வித்தியாசத்தில் மனோகரை வென்றார். தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார் மனோகர். கடந்த 2020ல், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வில் மனோகர் இணைந்தார்.
தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.,வில் அமைப்பு செயலராக உள்ள ஜெயகுமார், ராயபுரம் - திரு.வி.க., நகர் தொகுதிகளின் மா.செ.,வாகவும், தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார்.
அதனால், சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மனோகரை, இம்முறை எம்.பி., தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் ஜெயகுமார் உள்ளார். அவர் முழு ஒத்துழைப்பு அளித்து தம்மை வெற்றி பெற வைப்பாரா என்ற திகிலில் மனோ ஆழ்ந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து