Advertisement

சிலந்தி வலையில் அண்ணாமலை!

நேற்று முன்தினம், தன் தொகுதியான கோவையில் பிரசாரத்தை துவங்கச் சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு ஒரு 'ஷாக்' காத்திருந்தது. கட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு உள்ளூர் நிர்வாகிகள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்! ஏர்போர்ட்டில் மேள தாளங்களோடு அவருக்கு கிடைத்த வரவேற்பை தாண்டி, இது தான் உண்மையான வரவேற்பு.

வேட்பாளாராக நியமிக்கப்படுவதில் இருந்து எவ்வளவோ தப்ப முயன்ற அண்ணாமலை, உள்ளூர் பா.ஜ., முக்கியஸ்தர்களின் சிலந்தி வலையில் சிக்கிவிட்டார் என்பதே பேச்சாக இருக்கிறது. இதில் உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமல்லாது, அ.தி.மு.க.,- - தி.மு.க.,வின் கையும் இருப்பது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

இதை கேட்பவர்களில், 'இதென்னப்பா புருடா, கட்சி வளர்ந்து வர நேரத்துல மேலிடம் எப்டி ஒத்துக்குவாங்க?' என்று ஒரு தரப்பு கேட்க, 'அ.தி.மு.க., -தி.மு.க.,வுக்கு இதுல என்ன லாபம்?' என்று மற்றொரு தரப்பு கேட்கிறது.

இதற்கெல்லாம் அண்ணாலை விசுவாசிகள் கொடுக்கும் விளக்கம்:

வேறு வழியில்லை



தலைவருக்கு போட்டியிடுவதில் விருப்பம் இல்லை. அவருடைய விருப்பமாக 2026 தேர்தல் தான் இருந்தது. அதனால் தான், 'டில்லி அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை' என்று பேட்டி கொடுத்தார். இதை கட்சி மேலிடத்திடமும் தெரிவித்துவிட்டார். பிரதமர் மோடி வந்திருந்தபோது கூட, 'லோக்சபா தேர்தல் உனக்கான களம் அல்ல; கட்சி வெற்றிக்காக தமிழகம் முழுதும் பிரசாரம் செய்' என்று தான் சொல்லி இருந்தார். அந்த நம்பிக்கையில் இருந்த தலைவருக்கு, டில்லிக்கு வேட்பாளர் பட்டியலோடு சென்றபோது, அமித் ஷாவும், நட்டாவும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்; நாங்கள் பிரதமரிடம் பேசிவிட்டோம்' என்று வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார்.

இதற்கு காரணம் தமிழக பா.ஜ., முக்கிஸ்தர்கள் தான். அண்ணாமலைக்கு மற்ற பா.ஜ., தலைவர்களோடு அவ்வளவு சுமூகமான உறவு கிடையாது என்பது, நாடு அறிந்த விஷயம்.

அவர்கள், சமீபத்தில் அடிக்கடி டில்லிக்கு சென்று நட்டாவிடமும் அமித்ஷாவிடமும் 'தமிழகத்தில் இருந்து பிரதமர் போட்டியிட வேண்டும் இல்லையென்றால் அண்ணாமலை போட்டியிட வேண்டும். தலைவர்கள் களத்துக்கு வரும்போது தான் தொண்டர்களுக்கு உற்சாகம் பிறக்கும்' என்று வலியுறுத்தினர். கூடவே தலைவர்கள் போட்டியிடும் போதெல்லாம், பா.ஜ.,வுக்கு கிடைத்த வாக்கு விகித புள்ளிவிபரங்களையும் கொடுத்து தலைமையை சமாளித்தனர் என, டில்லியில் உள்ள கட்சியினர் எங்களிடம் சொல்கின்றன.

இப்போது ஜார்க்கண்ட் கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்தலில் நிற்க வைத்து தோற்கடித்தது போல, அண்ணாலையை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய குறிக்கோள். 'அண்ணாமலை அபரிமிதமாக வளர்ந்து விட்டார். 2026 வரை இன்னும் இரண்டு ஆண்டுகள் விட்டுவைத்தோமானால், பிடிக்க முடியாத உயரத்திற்கு போய்விடுவார்' என்று மற்ற தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

நிர்வாக சிக்கல்



இந்த தேர்தலில் என்ன முடிவு வந்தாலும் அவர்களுக்கு லாபம் தான். அண்ணாலை தோற்றுப்போனால், 'பிரதமர் பிரசாரம் செய்து கொடுத்தே தோற்றுவிட்டாரே' என்று அண்ணாமலையை அமுக்கிவிடுவர். அதற்குபின் அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தங்கள் முயற்சியையும் மீறி ஜெயித்துவிட்டால், டில்லி பக்கம் போய்விடுவார், இங்கு கவனம் செலுத்த முடியாது என்பதே அவர்கள் கணக்கு.

இதை கட்சி தலைமை எப்படி ஏற்றது என்பதே புரியவில்லை. இந்த உள்ளடி அரசியலை எல்லாம் தாண்டி, அண்ணாமலை போட்டியால், தேர்தலில் நிர்வாக சிக்கல் வரும் என்பது கூடவா அவர்களுக்கு தெரியாது? இப்போது பாருங்கள், அண்ணாமலைக்காக பணியாற்ற ஏராளமான பா.ஜ., தொண்டர்கள் பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த மாவட்டங்களில் அப்போது யார் வேலை செயவர்? தமிழகத்தில் பா.ஜ.,வின் ஒரே பிரசார பீரங்கி அண்ணாமலை. தேர்தல் நேரத்தில் அவரை ஒரு தொகுதியில் கட்டிப்போட்டால், மற்ற வேட்பாளர்களுக்கு யார் பிரசாரம் செய்வர்? அனைவரும் பொன்னார், தமிழிசையை போல பிரபலமானவர்கள் இல்லையே!

தொகுதி பங்கீடில் இருந்து, வேட்பாளர் தேர்வு வரை கட்சி தலைமை அனைத்திலும் சொதப்பி இருப்பதை பார்த்தால், அவர்களுக்கு தமிழகத்தின் மீது கவனம் இல்லை என்றே சாதாரண பா.ஜ., தொண்டர்களுக்கும் தோன்றுகிறது.

பிரதமர் மட்டும் தான் தமிழகத்துக்காக உருகுகிறார். வேறு யாருக்கும் அக்கறை இல்லை.

உள்ளடி வேலை இப்படி இருக்கிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)