/ செய்திகள் / எங்களின் வலிமைக்கேற்ப தொகுதிகள் வேண்டும்; கேட்கிறார் திருமாவளவன்

எங்களின் வலிமைக்கேற்ப தொகுதிகள் வேண்டும்; கேட்கிறார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நாங்கள் பேரம் பேசும் கட்சி இல்லை. அதிகாரப்பகிர்வு என்பது எங்களின் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும்,' என்று திமுகவுடன் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; விசிக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். 2026 சட்டசபை பொதுத்தேர்தல் வழக்கமான, சராசரியான பொதுத்தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை 100 சதவீதம் உறுதிபடுத்த வேண்டும் என்ற அக்கறையோடு, இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கம் என்ற உரிமை உணர்வுடன், எங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். நாங்கள் பேரம் பேசும் கட்சியாக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இது தமிழகத்திற்கான வெற்றி, தமிழக மக்களுக்கான வெற்றி, சமூக நீதி அரசியலுக்கான வெற்றி என்ற புரிதலோடு, எங்களின் அதிகாரப்பகிர்வு குறித்து எங்களின் கருத்துக்களை கேட்டுக் கொண்டார்கள்.இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில், அமைதியான முறையில் நடந்திருக்கிறது. எந்தெந்த தொகுதிகள் குறித்து பேசவில்லை. எங்களுக்கான அதிகாரப்பகிர்வு என்பது எங்களின் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும். எங்கள் பங்களிப்புக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும் திமுக குழுவுக்கு நாங்கள் தெரியப்படுத்தியுள்ளோம். அது உறுதியான பிறகு, வெளியிடுவோம். ராஜ்யசபா சீட் ஏதும் கேட்கவில்லை. புதுச்சேரியில் தொகுதிகளை ஒதுக்க கேட்டிருக்கிறோம். ஒரு பொதுத் தொகுதி உள்பட 3 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். தலைவரோடு கலந்து பேசி எங்களுக்கு அழைப்பு விடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மோடி வித்தை எடுபடாது. எத்தனை முறை வந்தாலும், என்னென்ன பேசினாலும், அது தமிழக அரசியலில் எடுபடாது. தமிழகம் என்பது வேறு, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வேறு. 2026 தேர்தலில் தமிழக மக்கள் பாஜவுக்கு மீண்டும் உணர்த்துவார்கள். இங்கு மதவாத அரசியல் மற்றும் ஜாதி அரசியலுக்கு இடமில்லை. தமிழக மக்கள் இதனை அனுமதிக்கமாட்டார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை உள்ளது.தொகுதி பங்கீட்டில் அதிகாரப் பகிர்வு என்பது அமைச்சரவையில் பங்கு கேட்பது கிடையாது. தொகுதி எண்ணிக்கையைத் தான் அதிகாரப் பகிர்வு என்னும் பெயரில் சொல்கிறோம். தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும். இந்தக் கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

S.V.Srinivasan
மார் 03, 2026 10:26

அப்படி என்ன உங்கள் வலிமை. ஒரு வெள்ளை அறிக்கை விடுங்க பார்க்கலாம். அட ஏம்ப்பா. கொடுத்ததை வாங்கிட்டு ஓரமா போய் உக்காரு.


Nathansamwi
மார் 02, 2026 23:55

பிளாஸ்டிக் நாட்காலி குருமா .


Santhakumar Srinivasalu
மார் 02, 2026 20:57

என்ன வலிமை இருக்குன்னு பேரம் பேசரார்? தேவையில்லாமல் அறிக்கை வெளியிட்டு உளறி கூட்டனியை கேவலப்படுத்துவது தான் இவர் வேலை?


பேசும் தமிழன்
மார் 02, 2026 20:26

உங்களின் வலிமைக்கேற்ப என்றால்.... 2 சீட்டுக்களில் ஒன்றை குறைத்து.... 1 சீட் மட்டுமெ வழங்க வேண்டும்..... அது தான் உங்கள் வலிமை.... நீங்களெல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று முன்னால் முதல்வர் கருணாநிதி கூறியது நியாபகம் இருக்கா ?


கூத்தாடி வாக்கியம்
மார் 02, 2026 18:10

அண்ணே நம்ம வலிமைக்கு சீட்டுன்னா ஒன்னும் கிடைக்காது . ஓசி பிரியாணி இலை தான் கிடைக்கும்


ஆகுயர்தான்
மார் 02, 2026 17:32

இவரது வலிமை உயர் நீதிமன்றத்தில் கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்தி அனைவருக்கும் நிரூபித்து விட்டார்


Shan
மார் 02, 2026 17:14

முஸ்லீம் லீக் மத சார்பற்ற கட்சியா ?,


V Venkatachalam, Chennai-87
மார் 02, 2026 17:50

ஆமாம். அதிலென்ன சந்தேகம்? முஸ்லிம் லீக் ன்னு தானே சொல்றாங்க. இந்து லீக் ன்னு சொல்லலியே. திராவிடியா மூடல் ஆட்சியில் கட்சி பேரில் இந்து ங்குற வார்த்தை இருக்கப் புடாது. பாக்கி கட்சிகள் பேருல எந்த மதத்தின் பேரு வேணாலும் இருக்கலாம். டமில் நாட்டு மதச்சார்பற்ற அரசின் சித்தாந்தம் அதுதான். அதேதான்.


என்றும் இந்தியன்
மார் 02, 2026 17:10

என்ன வலிமை என்று விவரமாக சொல்லமுடியுமா???உடல் வலிமையா?? உள்ளவலிமையா? பண வலிமையா??உளறல் வலிமையா???


krishna
மார் 02, 2026 17:05

UNGAL VALIMAIKKU UDANJA PLASTIC CHAIR READY.AZHUKKALAYAM POYI ADAPPU EDUTHU UKKARUNGA


Natarajan Shankar
மார் 02, 2026 15:22

மாமாவளவனுக்கு எதுல சக்தி ன்னு யாருக்கு தெரியும் ? சத்தியமா உண்மைய மட்டும் பேசமாட்டார் அதுனால வாயில சக்தியோ.. ?