/ செய்திகள் /  மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களால் திருச்சி வளமாகும் என நம்பிக்கை

 மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களால் திருச்சி வளமாகும் என நம்பிக்கை

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக, ஒரே நேரத்தில் மூன்று பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாவது அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் கவிஞர் ராஜாத்தி என்ற சல்மா, 57. இவர், தி.மு.க., சார்பில் கடந்த ஆண்டு ஜூலையில் ராஜ்யசபா எம்.பி.,யானார். இவரே, திருச்சி மாவட்டத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான முதல் பெண் எம்.பி., இந்நிலையில், தற்போது காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, தி.மு.க., சார்பில் திருச்சி சிவா, கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில், திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும், ராஜ்யசபா எம்.பி.,க்களாவது உறுதி. இதன் வாயிலாக, முதன் முறையாக, ஒரே நேரத்தில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். ஏற்கனவே, திருச்சி லோக்சபா தொகுதி எம்.பி.,யான துரை, தொகுதி பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர், ராஜ்யசபா எம்.பி., ஆவதால், திருச்சி மாவட்ட வளர்ச்சி, அபரிமிதமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதில், கிறிஸ்டோபர் திலக், முதல்முறை எம்.பி.,யாகிறார். திருச்சி சிவா, ஐந்தாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Varadarajan Nagarajan
மார் 07, 2026 18:34

இதுவரை தங்கள் பகுதி வளர்ச்சிக்காக அல்லது பிரச்சனைகளுக்காக யாரவது முறையாக எடுத்துரைத்து பெற்றுத்தந்துள்ளார்களா? அவையின் மையத்திற்குவந்து கூச்சலிடுவதும் பேச வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் அரசியல் காட்சிக்கூட்டம்போல கட்சி தலைவரை புகழ்பாடுகின்றனர்.


Thirumal Kumaresan
மார் 07, 2026 16:45

ஆமா அவங்க குடும்பம் வளமாகும்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 07, 2026 16:26

40 பிரதிநிதிகளால் குன்றியத்துக்கு விளைந்த நன்மையைவிடவா 3 பிரதிநிதிகளால் திருச்சிக்கு நன்மை வந்துவிடப்போகிறது ?


subash
மார் 07, 2026 15:36

ஹிந்துக்களுக்கு திருச்சி பகுதியில் இருந்து பிரதிநிதி இல்லையா ? உலகில் எந்த நாட்டிலும் இப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சியும் , மூடத்தனமான மக்களும் இருக்க முடியாது


அசோகன்
மார் 07, 2026 15:19

பார்லிமெண்டில் அசிங்கமாக கத்தி கலாட்டா செய்வது அதிகமாகும்..... பார்லிமென்ட் ஐயே அசிங்கப்படுத்திகொண்டிருப்பது நம் தமிழ் MP கள்


Murugesan
மார் 07, 2026 15:02

தமிழக பிரதநிதிகளாக போகிற திராவிட கட்சி ஆட்கள் அனைவருமே அயோக்கியர்கள் தமிழினத்துரோகிகள், கேவலமான ஊழல் அயோக்கியர்கள்


juvee
மார் 07, 2026 13:39

எல்லா திமுக எம்பி களும் என்ன செஞ்சாங்க


SRIDHAAR.R
மார் 07, 2026 12:30

இன்னுமாடா நம்புறீங்க


Balasubramanian
மார் 07, 2026 11:28

சங்கர் சலீம் சைமன் திமுக தங்களை தாங்களே வளமாக்கி கொள்ள கையாளும் உத்தி இது! நிதி வம்சத்தினர் பல்கி பெருக மேலும் ஒரு வாய்ப்பு!


Sun
மார் 07, 2026 11:21

கால் நூற்றாண்டுக்கும் மேல் திருச்சி. சிவா டெல்லியில் எம்.பியாக இருக்கிறார். அதற்கு முன்பு அவர் புதுக்கோட்டை எம்.பி.யாக இருந்தார். இது வரை திருச்சிக்காக சிவா என்ன சாதித்திருக்கிறார்? சிவா கூட புதிதாக இருவர் சேர்ந்தால் மட்டும் திருச்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்று விடுவார்களா என்ன?