Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


கூட்டணியில் அதிக கட்சிகளை திமுக சேர்த்ததற்கு விஜய் மீதான பயம் காரணமல்ல: சொல்கிறார் திருமாவளவன்

கூட்டணியில் அதிக கட்சிகளை திமுக சேர்த்ததற்கு விஜய் மீதான பயம் காரணமல்ல: சொல்கிறார் திருமாவளவன்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: விஜய் வந்த பிறகு தான், திமுக கூட்டணி உருவானது என சொல்வது அரசியல் அறியாமை, உளறல் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை திருமங்கலத்தில் அவர் அளித்த பேட்டி:
விஜய் மீது உள்ள பயத்தால், அதிக கூட்டணி கட்சிகளை திமுக சேர்த்துள்ளது என்று கூறுபவர்கள் தான், பதற்றத்தில், பயத்திலும் உள்ளனர். திமுக கூட்டணியானது, விஜய் கட்சி துவங்கும் முன்பே உருவான 'மெகா' கூட்டணி. இதில், ஒரு சில கட்சிகள் மட்டுமே புதிதாக சேர்ந்துள்ளன.
விஜய் வந்த பின், திமுக கூட்டணி உருவானது என்பது அரசியல் அறியாமை, உளறல்; அதில் எந்த பொருளும் இல்லை. வெளிப்படையாகவே, கூட்டணி ஆட்சிக்கு தயார் என விஜய் அறிவித்தும் கூட, அதிமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகளோ, திமுகவை எதிர்க்கும் கட்சிகளோ அவருடன் சேரவில்லை.
அதை மூடி மறைப்பதற்கு, இப்படிப்பட்ட கருத்தை திட்டமிட்டு பரப்புகின்றனர். விஜயின், திருமணத்தை மீறிய உறவு தொடர்பான தனிப்பட்ட விவகாரம் குறித்து, நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
பீஹாரில், நன்மதிப்புடைய நிதிஷ்குமார், பாஜவுடன் சேர்ந்த பின், நன்மதிப்பு குறைந்தது. தற்போது, முதல்வர் பொறுப்பில் இருந்து விலகி, ராஜ்யசபா எம்பி என்ற நிலையை பாஜ உருவாக்கியுள்ளது.
இதேநிலை, அதிமுகவுக்கு வந்து விடக்கூடாது என்பதை தான் தொடக்கத்தில் இருந்தே நான் சுட்டிக்காட்டுகிறேன். போகப்போக அவர்களும் பாஜவை புரிந்து கொள்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 07, 2026 01:44 pm

Who are you man?

Reply Rate this

துரியோதன கூட்டம்.

Reply Rate this
மார் 07, 2026 07:37 am

திமுக பல கட்சிகளை இணைத்து வலுவான நிலையில் உள்ளது.
மேலும் அரசு பணத்தில் மிக அதிகம் செலவழித்து முதல்வர் ஸ்டாலின் விளம்பரம். விஜய் + அதிமுக + மஜக சேர்ந்தால்தான் திமுகாவிற்கு நெருக்கம் கொடுக்க முடியும்.

Reply Rate this
மார் 07, 2026 12:00 am

Karunanithi Family needs more support to loot TN public money

Reply Rate this
மார் 06, 2026 11:04 pm

கமலுக்கு ஒரு படத்தில் எல்லாவற்றிற்கும் பயம் வரும். அது போல் தான் உங்க தலைவருக்கும். 4 முஸ்லீம் கட்சி ரெண்டு கிறிஸ்துவ கட்சி அப்புறம் உங்க கட்சி எல்லாம் சேர்த்துக்கிட்டு மத நல்லிணக்கம் என்று பொய் வேற. கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போன அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடு.

Reply Rate this
மார் 06, 2026 10:30 pm

திருமாவின் இந்த பதற்றமே பயத்தின் வெளிப்பாடுதான். விஜய்யின் வருகை விசிகவுக்கே பேராபத்து என்பதாலேயே உளறுகின்றார். திமுக சொல்ல வேண்டியதை இவர் ஏன் சொல்கின்றார்?

Reply Rate this
மார் 06, 2026 10:23 pm

சரியா சொன்னீங்க தலீவா. அப்படி செஞ்சதே நமக்கு ஆப்பு வெக்கத்தான்

Reply Rate this
மார் 06, 2026 10:12 pm

இப்போது திமுகவில் உள்ள அமைச்சர்களில் பெரும்பாலும் அதிமுகவில் உள்ளவர்கள் தான். அதிலும் ஊழலில் திளைத்து விளையாடியவர்கள்

Reply Rate this
மார் 06, 2026 10:12 pm

கோழி இறகுக்குள் குஞ்சுகள் பாதுகாப்பா இருக்குற மாதிரி திமுக கூடாரத்தில் இருந்து கொண்டு பேச்சைப் பாரு. தனியா நின்னு தேர்தலில் போட்டியிடணும். அதே மாதிரி தனியா பாஜக வை எதிர்த்து பேசணும்.

Reply Rate this
மார் 06, 2026 09:50 pm

நேர்மையான ஆட்சிய கொடுத்திருந்தா ஜெ மாதிரி தனியாக நிற்கலாமே

Reply Rate this