Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


சட்டம் ஒழுங்கு கைமீறியதை ஸ்டாலின் குறிப்பிட்டாரா? கேட்கிறார் ராமதாஸ்

சட்டம் ஒழுங்கு கைமீறியதை ஸ்டாலின் குறிப்பிட்டாரா? கேட்கிறார் ராமதாஸ்

சென்னை: சட்டம் ஒழுங்கு கைமீறியதை ஸ்டாலின் குறிப்பிட்டாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன், நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில், ஆயுதங்களுடன் வந்த கும்பல் இருவரை வெட்டிக் கொன்றது. அதைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்திலும், அரிவாளுடன் சென்ற கும்பல் மக்களை தாக்கியுள்ளது. கோவை, சூலுாரில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய, இருவரை பிடிக்க சென்ற சப் இன்ஸ்பெக்டரை, அரிவாளால் வெட்டியுள்ளனர்.
சட்டம் -ஒழுங்கு இந்த அளவுக்கு மோசமாக உள்ள நிலையில், காங்கிரசுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதும், 'எல்லாம் முடிந்து விட்டது' என முதல்வர் ஸ்டாலின் கையசைத்தது, சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. இதை முதல்வரே, பெருமையாகவும் கூறி வருகிறார். தமிழகத்தில், சட்டம் -ஒழுங்கு கை மீறி போய் விட்டது என்பதை தான், 'எல்லாம் முடிந்து விட்டது' என, கையசைப்பின் வாயிலாக ஸ்டாலின் தெரிவித்தாரா? இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Advertisement

மார் 06, 2026 07:59 pm

அது சரி
அடுத்த இலக்கு
த வெ.க வா ?

Reply Rate this