Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களால் திருச்சி வளமாகும் என நம்பிக்கை

 மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்களால் திருச்சி வளமாகும் என நம்பிக்கை

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக, ஒரே நேரத்தில் மூன்று பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாவது அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் கவிஞர் ராஜாத்தி என்ற சல்மா, 57. இவர், தி.மு.க., சார்பில் கடந்த ஆண்டு ஜூலையில் ராஜ்யசபா எம்.பி.,யானார்.

இவரே, திருச்சி மாவட்டத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான முதல் பெண் எம்.பி., இந்நிலையில், தற்போது காலியாகும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, தி.மு.க., சார்பில் திருச்சி சிவா, கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில், திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும், ராஜ்யசபா எம்.பி.,க்களாவது உறுதி.
இதன் வாயிலாக, முதன் முறையாக, ஒரே நேரத்தில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். ஏற்கனவே, திருச்சி லோக்சபா தொகுதி எம்.பி.,யான துரை, தொகுதி பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர், ராஜ்யசபா எம்.பி., ஆவதால், திருச்சி மாவட்ட வளர்ச்சி, அபரிமிதமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதில், கிறிஸ்டோபர் திலக், முதல்முறை எம்.பி.,யாகிறார். திருச்சி சிவா, ஐந்தாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாகிறார்.

Advertisement

மார் 07, 2026 01:39 pm

எல்லா திமுக எம்பி களும் என்ன செஞ்சாங்க

Reply Rate this
மார் 07, 2026 12:30 pm

இன்னுமாடா நம்புறீங்க

Reply Rate this
மார் 07, 2026 11:28 am

சங்கர் சலீம் சைமன் திமுக தங்களை தாங்களே வளமாக்கி கொள்ள கையாளும் உத்தி இது! நிதி வம்சத்தினர் பல்கி பெருக மேலும் ஒரு வாய்ப்பு!

Reply Rate this
மார் 07, 2026 11:21 am

கால் நூற்றாண்டுக்கும் மேல் திருச்சி. சிவா டெல்லியில் எம்.பியாக இருக்கிறார். அதற்கு முன்பு அவர் புதுக்கோட்டை எம்.பி.யாக இருந்தார். இது வரை திருச்சிக்காக சிவா என்ன சாதித்திருக்கிறார்? சிவா கூட புதிதாக இருவர் சேர்ந்தால் மட்டும் திருச்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்று விடுவார்களா என்ன?

Reply Rate this
மார் 07, 2026 11:04 am

மொகரக்கட்டைகளே பார்த்தாலே தெரியுது நல்லா வளமாக்குவாங்க என்று ...

Reply Rate this
மார் 07, 2026 10:28 am

திருச்சி வளமாகுதோ இல்லையோ... திருச்சியில் உள்ள திரவிஷன்கள் பலதலைமுறைகளுக்கு நல்ல வளமாகிவிட்டார்கள்....திருச்சியை சுற்றி இருந்த திராவிஷா குறுநிலமன்னர்கள் சிற்றரசர்களாகவும், சிற்றரசர்கள் அரசர்களாகவும், அரசர்கள் மன்னர்களாகவும் கொழுத்துவிட்டனர்..

Reply Rate this
மார் 07, 2026 09:28 am

சசிகலாவிற்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

Reply Rate this
மார் 07, 2026 08:32 am

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கொள்ளையர்கள் தான் அபரிமிதமாக வளர்வார்கள்

Reply Rate this
மார் 07, 2026 08:19 am

அரசியல் நோக்கர்களுக்கு மண்டையில் களிமண் ஒரு வேளை இவிங்க வேணா வளர்ச்சி அடையலாம்

Reply Rate this

திருச்சியில் அபரிமிதமாக வளரும்

Reply Rate this