காங்கிரஸ் பேரியக்கம் அல்ல அறிவாலய குப்பை தொட்டி: அ.தி.மு.க., தரப்பு பதிலடி
சென்னை: 'பாதச்சுவடு தெரியாமல் நாட்டை விட்டு காங்கிரஸ் அழியப்போவது உறுதி' என, அ.தி.மு.க., கடுமையாக விமர்சித்து உள்ளது.
அ.தி.மு.க., வெளியிட்டுள்ள பதிவு:
மட்கிப் போன காங்கிரசுக்கு, கொள்கைக் கூட்டணி என்றால் என்னவென்று தெரியுமா? லோக்சபாவில் காங்., -- எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்' ஆனபோது, கமுக்கமாக இருந்து சீட்டை காப்பாற்றிக் கொள்வதும், இந்திரா பெயரை நீக்கி விட்டு கருணாநிதி பெயர் வைத்தால் கூட, வெட்கமே இல்லாமல் அமைதி யாக இருப்பதும் தான் கொள்கை கூட்டணியா?
முன்னாள் பிரதமர் இந்திராவை தி.மு.க.,வினர் தாக்கி, அவர் தலையில் இருந்து வடிந்த ரத்தத்தை, கருணாநிதி என்னவென்று சொன்னார் என்பதை தமிழக காங்., தலைவர் சொல்வாரா? கருணாநிதியின் விஞ்ஞான ஊழல்களை, உலகிற்கே எடுத்து சொன்ன சர்காரியா கமிஷனை அமைத்தது யார் என்பதை தி.மு.க., சொல்லுமா?
த.வெ.க.,வை காட்டி பேரம் பேசுவது தான் காங்கிரசின் கொள்கை என்பது மக்களுக்கு இப்போது புரிந்துள்ளது. மூன்று மாதங்களாக, அறிவாலயத்தைப் பார்த்து சத்தியமூர்த்தி பவனும், சத்தியமூர்த்தி பவனை பார்த்து அறிவாலயமும் மாறி மாறி காறித் துப்பிக் கொண்டதை, ஒரே இரவில் துடைத்து விட்டீர்களா?
காமராஜரை, அவர் வாழும் வரை கேவலமாக சித்தரித்து இழிவுபடுத்தியவர் கருணாநிதி. காமராஜர் மறைந்த பிறகும், சென்னை மெரினாவில் இடம் தர மறுத்து அசிங்கப்படுத்திய கருணாநிதியின் வரலாறு காங்கிரசுக்கு மறந்து விட்டதா?
தி.மு.க.,வுடன் சேர்ந்து செய்த ஈழப் படுகொலை உள்ளிட்ட அத்தனை பாவங்களுக்குமான சம்பளமாக, 2014ல் இருந்து அதல பாதாளத்தை நோக்கி, '100 தோல்வி காங்கிரஸ்' என்று நாடே கைகொட்டி சிரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலினிடம், கேவலம் மூன்று சீட்டுக்கு கெஞ்ச வேண்டிய இடத்திற்கு போன பிறகும், காங்., பண்ணையார்களுக்கு திமிர் அடங்கவில்லை.
பாதச்சுவடு தெரியாமல், நாட்டை விட்டு காங்கிரஸ் அழிந்து ஒழியப் போவது உறுதி. காமராஜர் காலத்தில் தான், காங்கிரஸ் பேரியக்கம்; இப்போது, வெறும் அறிவாலய குப்பை தொட்டி தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
காங்கிரஸ் தலைவர்...சோனியா Mp
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் Mp
பிரியங்கா...காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர்..MPஒரே குடும்பத்தில் மூன்று MP க்கள்
அதை போல் தீ மூ க வில் தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின்
இளைஞர் அணி தலைவர் மற்றும் துணை முதல்வர் உதய நிதி
மகளிர் அணி தலைவி கனி மொழி MP
தீ மூ க மற்றும் காங்கிரஸ் இரண்டுமே குடும்ப Corporate கட்சிகள்
காங்கிரஸ் கட்சி ஒரு பட்டுப் போன மரம்
காய்ந்து போன கருவாடு
இது ஒரு போதும் மீன் ஆகாது
காங்கிரஸ் பேரியக்கம் அல்ல என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் பாஜக ஒரு கதிரியக்கம் , அது நாட்டை அழித்து விடும் என்பதும் உண்மையே!
இன்னும் சிறிது நாட்களில் அ.தி.மு.க என்ற கட்சி கமலாலயத்தின் குப்பை தொட்டியாக மாறி விடும் என்பது இன்னும் அதிமுகவினருக்கு தெரியவில்லை போலும்.
அறிவாலய குப்பை பொதிகளை சுமக்கும் கழுதைதான் இந்த தமிழக காங்கிரஸ்.
ஜண்டா ஷா வே நொந்து போகும் அளவுக்கு ஸ்டாலின் OPS தேமுதிக காங்கிரஸ் என்று எல்லாம் வளைத்து போட்டுவிட , இனி தமிழகம் சைடு வருவதில்லை என்று DECIDE செய்து விட்டார் மீண்டும் மோடி தான் வருவார் ஷா சாரி இந்த சைடு வரவே மாட்டார் , இவர் பந்தா டெல்லியோடு இங்கு வேகளை
காங்கிரசு சொரணை கெட்டவர்கள். கடந்த காலத்தில் காமராசர், இந்திரா அம்மையார் ராசீவ் போன்றவர்களை கேவலமாக நடத்தியவர்கள் தீயசக்தி தீமுகாவினர். இன்னமும் சொரணை கெட்டு அறிவில்லா ஆலயத்தில் கொத்தடிமை பணி செய்து கொண்டருக்கிறார்கள்.
.
வெட்கமே இல்லாமல் காங்கிரஸ் அறிவாலயம் வருது அனால் எடுபுடி பெட்ஷீட் போட்டு முகத்தை மறைத்து 4 கார் மாறி ஏதோ KIDNAPPER கடத்துவது போல இவர்கள் பேச அருகதை இருக்கா
குப்பைகளை இரு விதமாக பிரிக்கலாம், ஒன்று மக்கும் குப்பை, மற்றோன்று மக்காத குப்பை. இதில் மக்கும் குப்பையால் பெரிய பாதிப்பு கிடையாது, ஆனால் மக்காத குப்பை சுற்றுபுறச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும்.
அதிமுக சொல்கின்றது, காங்கிரஸ் குப்பை என்று. மக்கள் நாங்கள் சொல்கின்றோம், எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிறகு இப்போது இருக்கும் அதிமுக மக்காத குப்பை என்று.
அதனால் யாருக்கும் பிரயோஜனமில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
காமராஜர், கக்கன், ராஜாஜி. சத்தியமூர்த்தி, சி சுப்பிரமணியம், வெங்கட்ராமன், போன்ற நேர்மையான மக்கள் தலைவர்களை காங்கிரஸ் மறந்தது அதன் இறங்கு முகத்திற்கு மிக பெரிய காரணம்.
சுதந்திரத்திற்கு போராடிய VOC, பாரதியார், குமரன், நேதாஜி, முத்துராமலிங்க தேவர், போன்ற தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் நேரு குடும்பத்தை மட்டும் தூக்கி பிடித்தது,
அதன் நம்பிக்கை தன்மையை மிகவும் குறைத்து விட்டது.

ஸ்டமக் பர்னிங் ரெம்ப காந்துது பலருக்கு.