Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


உங்க 'பாஸ்' பழனிசாமி முடிவு செய்வார்: தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடம் பியூஸ் கோயல் தகவல்

உங்க 'பாஸ்' பழனிசாமி முடிவு செய்வார்: தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடம் பியூஸ் கோயல் தகவல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மதுரை: ''தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்திற்கு உங்கள் 'பாஸ்' பழனிசாமி தான். அவர் தான் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார்,'' என, மதுரையில் நடந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ., தமிழக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

மதுரையில் நேற்றுமுன்தினம் தே.ஜ., கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி , அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் வாசன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற் றனர். நேற்றுமுன்தினம் காலையிலேயே மதுரை வந்த அவர்கள், பொதுக்கூட்டம் நடக்கும் இடம் அருகே ஓட்டலில் தங்கினர்.

மாலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுஇரவு ஓட்டலுக்கு திரும்பிய கூட்டணி தலைவர்கள் பியூஸ் கோயல் தலைமையில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து விவாதித்தனர்.
அப்போது பா.ஜ., ஏற்பாட்டில் கூட்டணியில் சேர்ந்த சில கட்சி தலைவர்கள், தொகுதி பங்கீடு குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த பியூஸ் கோயல், ''தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்திற்கு உங்கள் 'பாஸ்' பழனிசாமி தான். அவர்தான் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார்,'' என சிரித்துக்கொண்டே கூறினார். எல்லோரது பார்வையும் பழனிசாமி பக்கம் திரும்பியது. அவரும் தன் பங்கிற்கு சிரித்தார். தொகுதி பங்கீடு குறித்து வாய் திறக்கவில்லை.
கூட்டணி கட்சித் தலைவர்கள் புறப்பட்டு சென்றனர். அதன்பின் அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, 'பா.ஜ., ஏற்பாட்டில் கூட்டணியில் சேர்ந்த கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் பா.ஜ., தனக்கு ஒதுக்கப்படும் 'சீட்'டில் இருந்து பிரித்துக் கொடுக்கும்' என பழனிசாமி பிடிகொடுக்காமல் பேசினார்.
தொகுதி பங்கீடு குறித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்குபின் தான் பேச்சுவார்த்தை என்பதில் அ.தி.மு.க., உறுதியாக உள்ளது. பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும் உறுதிசெய்துள்ளார்.

Advertisement

மார் 03, 2026 03:18 pm

பழமொழி ஞாபகம் வருகிறது!

Reply Rate this
மார் 03, 2026 07:56 am

எடப்பாடி தனிமனித செல்வாக்கு புரட்சி தலைவர் போல் மாநிலம் முழுவதும் இல்லை. இவரது ஆணவம் திமுகவிற்கு ஊக்கம் தரும். கருணாநிதி ஒவ்வொரு பகுதி செல்வாக்கு பெற்றவரை மதிபார். உதாரணம் சேலம் வீர பாண்டி ஆறுமுகம்? தொகுதி பங்கீட்டில் சுய நலம் / ஆதிக்க உணர்வு இருந்தால், எடப்பாடி எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது. ஆட்சி அமைக்க முடியாமல், தோல்வி என்றால் கட்சி கரைந்து விடும்.

Reply Rate this
மார் 03, 2026 06:46 am

பியூஸ் கோயல் மனதிற்குள் சொல்லி கொண்டது, "கடைசியில் உங்கள் பாஸ் என்னிடம் approval வாங்கி கொள்வார்"

Reply Rate this