Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


பிரதமர் தமிழகம் வந்த நாளில் போராட்டத்தை தூண்டிவிட்ட திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

பிரதமர் தமிழகம் வந்த நாளில் போராட்டத்தை தூண்டிவிட்ட திமுக அரசு: நயினார் நாகேந்திரன்  குற்றச்சாட்டு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: பிரதமர் தமிழகம் வந்த நாளில் திமுக அரசு போராட்டத்தைத் தூண்டிவிட்டது கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
நேற்றைய தினம் நமது பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளும் விசிகவும் இணைந்து சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்து போராட்டம் நடத்தியுள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போன்றோர் அறவழியில் போராடிய போது அவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கைவிலங்கு பூட்டி முடக்கப் பார்த்த ஏவல்துறை நேற்று மட்டும் வேடிக்கை பார்த்தது ஏன்?
நியாயமான கோரிக்கைகள் வலியுறுத்தி போராடும் சராசரி பொதுமக்களுக்கு ஒரு நியாயம், திமுக-வின் கூட்டணிக் கட்சியினருக்கு ஒரு நியாயமா? குறிப்பாக, பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், வேண்டுமென்றே திட்டமிட்டு தலைநகரிலேயே கூட்டணிக் கட்சியினரைப் போராடச் செய்து, பிரதமரின் பாதுகாப்பில் களங்கம் ஏற்படுத்த திமுக அரசு திட்டமிட்டதா எனும் சந்தேகம் எழுகிறது.
ஒருவேளை, தனது கூட்டணிக் கட்சியினர் பங்கெடுக்கும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறனைக் கூட திமுக அரசு இழந்துவிட்டது போலும். காரணம் எதுவாயினும், பிரதமர் தமிழகம் வந்த தினத்தில் திமுக அரசின் இந்த மெத்தனப்போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement

மார் 02, 2026 10:07 pm

ஏற்கனவே தமிழகத்தில் ஒரு முன்னாள் பிரதமர் பலி கொடுக்கப்பட்டு உள்ளார்.

Reply Rate this
மார் 02, 2026 09:05 pm

ஜனநாயக நாட்டில் போராட்டம் பன்றது அனுமதிக்கப்பட்டது ஒன்றுதானே. தனது எதிர்ப்பை மக்கள் அப்படித்தான் காட்டமுடியும். இதற்கும் மோடி வருகைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.

Reply Rate this
மார் 02, 2026 08:22 pm

ஈரான் மீது தாக்குதலை எதிர்த்து போராட்டம் நடந்ததில் என்ன தவறு?

Reply Rate this
Modisha - Chennai
They have every right. But let them go to Iran and pro. Good news will come to us.
மார் 02, 2026 08:56 pm
Rate this
மார் 02, 2026 07:38 pm

திமுக தேசதுரோக செயல்களை தொடர்ந்து அனுமதிக்கிறது. ஒரு நாட்டின் தூதரகங்களை முற்றுகையிடுவது அந்நாட்டை முற்றுகையிடுவதற்கு சமமாகும். தேவையின்றி அமெரிக்கா பாரதம் ஆகிய நாடுகளுடன் பகையை மூட்டுகிறது தீயமுக அரசு

Reply Rate this
மார் 02, 2026 07:22 pm

பிரதமர் மீது தாக்குதல் நடத்த கூட சதி செய்து இருப்பார்கள்.... எமகாதகர்கள்.... எதற்கும் நன்றாக விசாரிப்பது நல்லது.

Reply Rate this
மார் 02, 2026 06:37 pm

அமித்ஷா சென்னை வந்தபோது கரண்டை கட் பன்னிட்டு 1 வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்ததை மறந்துட்டு இப்போ மோடி வரும்போது போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துட்டு முதல் குடும்பம் திகாருக்கு போக போகுது.

Reply Rate this
மார் 02, 2026 05:10 pm

தமிழக காவல் துறை மிக கேவலமா, அருவருக்கத்தக்க , வெறுப்பு துறையாக மாறிவிட்டது .

Reply Rate this
மார் 02, 2026 05:08 pm

போராட்டம் நடந்தது Iran vs US/Israel போர் தொடர்பாக சென்னையில் அமெரிக்க தூதரகம் முன்பாக நடந்தது.
நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மதுரையில் நல திட்டங்களை தொடங்கி வைத்து, கோவில் சென்று வழிபாடு செய்து விட்டு, பின்னர் பொது கூட்டத்தில் பேசினார்.
இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

Reply Rate this
sankar - Nellai
ஆனால் அந்த மகானுபவர்கள் எழுப்பிய கோஷங்களை கேட்பீர்களா தம்பி
மார் 02, 2026 07:36 pm
Rate this
மார் 02, 2026 04:36 pm

We must impose shooting orders for such activists..

Reply Rate this
மார் 02, 2026 04:05 pm

ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணிக்க மாநில அரசுகளை நேற்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதை சாக்காக வைத்து கொண்டு திராவிட மாடல் இந்த போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறது என்பது கண்கூடு. இந்த மூடல் அரசை உடனே டிஸ்மிஸ் பண்ணனும். இவனுங்க அமெரிக்கா போயி தானே போராட்டம் பண்ணனும். கையாலாகாத கூட்டம்.

Reply Rate this
Senthoora - Sydney
எத்தனைதடவைத்தான் ஆட்சியை கவிழுங்க என்று ஸ்கெட்ச் போடுறீங்க, ஒண்ணுகூட வாக் அவுட் இல்லையே, திமுக ஆட்சிக்குவந்த மறுநாளே சாமி ஆட்சியை கலைக்கும் என்று சொன்னார், இன்று அவரு திமுகவுடன் ஒத்து ஊதுகிறார்,
மார் 02, 2026 04:57 pm
Rate this
செந்தூரா ....மக்களே இந்த திருட்டு ஆட்சியை விரட்டும் போது நீ எங்கே சென்று ஒளிந்து கொள்வாய்
மார் 02, 2026 05:16 pm
Rate this