எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்: கோவை மாநாட்டில் ஸ்டாலின் அறைகூவல்
கோவை: ''டில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் வெற்றிக்காக பொய் வழக்கு போட்டு, சிறையில் அடைத்தனர். இதே பார்முலாவையே, தமிழகத்திலும் பா.ஜ., நடத்தப் பார்க்கிறது. தங்கள் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டல் விடுக்கிறது,'' என, கோவை யில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
தமிழக மேற்கு மண்டல தி.மு.க., பூத் ஏஜன்ட்டுகளுக்கான மாநாடு, கோவையில் நேற்று நடந்தது.
மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அ.தி.மு.க.,வை தன்னுடைய கிளை கழகமாக மாற்றி, தமிழகத்தில் பா.ஜ., முன்னேற முயற்சிக்கிறது. திடீரென ஜெயலலிதா புகழ் பாடத் துவங்கியிருக்கிறார் பிரதமர் மோடி. 'குஜராத் மோடியா, தமிழக லேடியா' என்று சவால் விட்ட ஜெயலலிதா மீது மோடிக்கு திடீர் பாசம் ஏன்? ஜெயலலிதாவின் சவால் மறந்து விட்டதா? 'இந்தியாவிலேயே அ.தி.மு.க., அரசே ஊழல் அதிகமாக நடக்கும் அரசு' என அமித் ஷா பேசினாரே. நீங்கள் மறந்திருக்கலாம்; மக்கள் மறக்கவில்லை. ஓட்டுக்காக நடக்கும் நாடகம் எடுபடாது.
தேர்தல் முடிந்ததும் தே.ஜ., கூட்டணி சர்க்கஸ் கூடாரத்தை கலைத்து, ஆளுக்கு ஒருபுறம் பிரிந்து செல்வர். அக்கூட்டணி சர்க்கஸில் ரிங் மாஸ்டராக இருப்பது பா.ஜ., அவர்கள் சொல்படி தமிழக மக்கள் முன் வித்தை காட்டுபவர் பழனிசாமி.
வழக்குகளில் இருந்து தன்னையும், தன் உறவினர்களையும் காப்பாற்றிக் கொள்ள அமைக்கப்பட்ட கூட்டணியே பழனிசாமி கூட்டணி. எப்போதெல்லாம் தனக்கு பிரச்னை வருகிறதோ, அப்போதெல்லாம் டில்லிக்குச் சென்று சரணாகதி அடைவதையே பழக்கமாக வைத்திருக்கிறார்.
டில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் வெற்றிக்காக பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். தற்போது அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கோர்ட் கூறிவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் ஆகியோர் சிறையில் கழித்த நாட்களை பா.ஜ.,வால் திருப்பித்தர முடியுமா? இதே பார்முலாவையே தமிழகத்திலும் நடத்தி மிரட்டப் பார்க்கின்றனர். எந்த மிரட்டலுக்கும் நாங் கள் பயப்பட மாட்டோம். இவ்வாறு, அவர் பேசினார்.
Advertisement

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அமைச்சர்கள் நேரு, செந்தில் பாலாஜி, துரை முருகன், வேலு, ராஜ் கண்ணப்பன், பொன்முடி மற்றும் ஊழல் புகாரில் சிக்கியவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களின் நேர்மையை தமிழக அரசே நிரூபித்து இருந்தால், நீதிமன்றங்கள் தலையிட வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. எட் பற்றிய பயமும், இந்த இருக்காது.