திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு இடம் வழங்குவதற்கான ஒப்பந்தம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதை பிரேமலதா உறுதி செய்தார். அப்போதே, தொகுதி பங்கீட்டு பேச்சில் 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும், தே.மு.தி.க., தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆறு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்க தி.மு.க., முன்வந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று திமுக தேமுதிக இடையே ராஜ்யசபா சீட் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. திமுக சார்பில் டிஆர்பாலு, ஆர்எஸ்பாரதி, திருச்சி சிவா ஆகியோரும், தேமுதிக சார்பில் சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா பதவியை வழங்குவது குறித்த ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இரு கட்சிகள் இடையே கையெழுத்தானது.
ராஜ்யசபா தேர்தல் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை மறு தினம்( மார்ச் 05) முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களில் திமுக 4, அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற முடியும்.
Advertisement
தேமுதிக மிகவும் சாமர்த்தியமாக ஒரு ராஜ்ய சபா பதவியை பெற்றுவிட்டது அசம்பிலி தேர்தல்முன் வந்தது விடுவதால் அவர்களுக்கு வெற்றிதான் ஆனால் திராவிட மாடல் ஆட்சியை கைப்பற்றுமா என்பது பெரிய கேள்வி இவர்கள் கூட்டணி இருந்தும் பயனில்லாமல் போயிடும்
காலமெல்லாம் உழைத்த உங்கள் சொந்தக் குழந்தைகளுக்கு பழைய சோத்துக்குக் கூட வழி இல்லை. நேற்று வரை எதிரியுடன் உறவாடி விட்டு இன்று வீட்டிற்கு வந்த தேவையில்லாத விருந்தினருக்கு விலா புடைக்க அறுசுவையுடன் கூடிய விருந்து சாப்பாடு.
பிச்சைதான் எடுக்கப்போனோம் ..... சூடா சிக்கன் பிரியாணியே கிடைச்சிருச்சு ......
ஒரு குடும்ப கட்சி, தமிழகத்தில் உள்ள மற்றொரு குடும்ப கட்சி வளர உதவி செய்கிறது.
கண்ணா லட்டு திங்க ஆசையா என்னும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கூறும் டயலாக் தான் இந்நேரத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது... என்ன... டபுள் டக்கர் நாராயணா... பலே ஆள்யா நீ!!! வியாபாரமே ஆவாத ஓட்டத் தக்காளி எல்லாம் வியாபாரம் பண்ற... உண்மையில் விஜயகாந்த் இல்லாத தேமுதிகவினால் திமுகவுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை... ஆனால் திமுகவை வைத்துத் தான் தேமுதிக தன்னை உயர்த்திக் கொள்ளப் பார்க்கிறது... திமுக பக்கம் சாய்ந்தாலாவது ஒரு சில சீட்டுகள் தேமுதிகவுக்குத் தேறும் என என் பழைய பதிவுகளில் குறிப்பிட்டு வந்துளேன்... அது இந்தத் தேர்தலில் நடந்து கொண்டிருக்கிறது...
தேமுதிகவின் கேப்டள் பிறவிப்பயனை அடைந்துவிட்டார். இந்த எம்பி பதவி குடும்பத்திற்குத்தானே அன்றி கட்சி தொண்டர்களுக்கு கிடைக்காது

அப்பாடா நீ பிரேமலதாவும் நேராக சொர்க்கம்தான். ஜென்ம சாபலியம் கிடைத்துவிட்டது. இனி இதயத்தில் இடம் கொடுத்தாலும் மகிழ்ச்சி அடைவார்.