Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


போர் காரணமாக விலை உயர்வு... சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை

 போர் காரணமாக விலை உயர்வு... சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என்னாச்சு? திமுகவை கேட்கிறார் அண்ணாமலை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, இப்போதாவது சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும் என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:

நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், காஸ் பயன்பாடு, 45% அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த உஜ்வாலா இலவச காஸ் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால், கடந்த 10 ஆண்டுகளில், காஸ் இணைப்பு, 14 கோடி வீடுகளில் இருந்து, சுமார் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் இன்று காஸ் இணைப்பு உள்ளது.
பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, காஸ் இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வு தவிர்க்கவியலாமல் போகிறது.
திமுக தனது கடந்த 2021ம் ஆண்டில் தேர்தல் வாக்குறுதி எண் 503ல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக, தற்போதாவது, சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 11, 2026 08:39 am

கொஞ்சமாச்சும் உண்மை மனசாட்சியோடு பேசு.

Reply Rate this
மார் 10, 2026 06:16 pm

போருக்கு பச்சை கொடி காட்டிவிட்டு வந்தாரே ஒருத்தர். அவர் தானேப்பா சமையல் எரிவாயு விலையை ஏற்றியது. இது அ மலைக்கு தெரியாதா?

Reply Rate this

அக்கா கடந்த முறை சிலிண்டர் 500 க்கு தருவார் அப்டின்னு உருட்டினார். மக்கள் டாஸ்மாக் போதையில் வசதியாக மறந்து விட்டு இலவசத்தை வாங்கி புளகாங்கிதம் அடைந்து விட்டார்கள்

Reply Rate this
மார் 07, 2026 03:31 pm

சிலிண்டருக்கு மானியம் தர மாட்டார். குவாட்டருக்கு வேண்டுமானால் மானியம் தருவார்

Reply Rate this
மார் 07, 2026 02:03 pm

அண்ணாமலை உண்மையா கேட்டாரூ

தி மு க - தமிழ் இந துரோகி, தமிழ் தான் உயிர், ஹிந்தி திணிப்பு , பாசிசம், ஈயம், பித்தளை, தமிழகம் தலை நிமிரவேண்டும், தலை குனியாது




கத்துங்க

Reply Rate this
மார் 07, 2026 01:51 pm

அண்ணாமலைன்னு செய்தி வந்தா போது இந்த 200₹ உபிகளுக்கு செய் கலெக்ஷன்.. 100₹ மானியம் ஏண் குறைக்கவில்லைன்னு கேட்டா..

Reply Rate this
மார் 07, 2026 01:45 pm

உடன்பிறப்புகள் இங்கும் வந்து கைவரிசையை காட்டுகிறார்கள்.

Reply Rate this
மார் 07, 2026 01:45 pm

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்...அண்ணாமலை பெயரை கேட்டால் நம்ம ஆகூர் அவருக்கு நிக்காம பேதி ஆகுது

Reply Rate this
மார் 07, 2026 01:40 pm

இதெல்லாம் விடு தலை , இவ்வளவு நாள் மணல் கொள்ளை குவாரியை என்று பேசுவ என்ன பேச்சே காணோம் இப்போ அது நடப்பதில்லைய இல்லை மாமூல் மாமூலா வந்து கொண்டு இருக்கா பிழைக்க தெரிந்த தலைவர் பதவி இல்லாத தொண்டன்

Reply Rate this
எவ்வளோ தான் இன்பநிதிக்கு சலூட்
மார் 07, 2026 02:55 pm
Rate this
மார் 07, 2026 01:39 pm

இந்த மாதிரி செய்திகளுக்கு உடனே கதறுவார்கள், நமது கழக கண்மணிகள்...அட ஆருயிரே, உங்க ஈரான் ஆளுங்க பண்ற சேட்டைகளால போர் மூண்டு, உலகமே ஸ்தம்பித்து போய் கிடக்கிறது... பிஜேபி எப்பவாவது, உலகப் போர் வந்தாலும், கேஸ் விலையை கூட்ட மாட்டோம் என கூறினார்களா...??? உங்க விடியல் வாக்குறுதியை இப்பவாவது அமல் படுத்த சொன்னால், வழக்கம் போல கம்பி கட்டுற கதையை சொல்லுறீங்க...அது சரி, உங்களுக்கெல்லாம், நம் தமிழக போதை கும்பல் விளையாட்டு, DGP இல்லா தமிழகம், எங்கும் ஊழல், எதிலும் ஊழல், பாலியல் குற்றங்கள் பற்றியெல்லாம் கவலை இல்லையா...???எப்படி இன்னமும் விடியலை ஆதரிக்க மனம் வருகிறது...???என்னைப் பொறுத்தவரை, இந்த தேர்தல், தமிழகம் நல்லா இருக்கணும் என எண்ணும் தேச பக்தர்களுக்கும், வெளிநாட்டு சக்திகளிடம் மீண்டும் அடமானம் வைக்க துடிக்கும், தங்களைப் போன்ற, போலி திராவிட கும்பலுக்கும், இடையே ஆனது...!!! எது எப்படியோ...வெல்லும் NDA...எடப்பாடியே முதல்வர்...விஜயும், மலையும் துணை முதல்வர்கள்...வாழ்க தமிழகம்...வெல்க பாரதம்...

Reply Rate this
எடப்பாடி அவர்களுக்கு சிரித்தே டீஹைடிரேஷன் ஆகிவிடும். அது சரி, அதென்ன எங்கு பார்த்தாலும் துணை முதல்வர்கள்? இவர்களுக்கு வாரி வழங்க மக்களின் வரிப்பணம் விரயமாவதா? கோடி கோடியாய் வைத்திருப்பவர்கள் கொள்ளை அடித்தவர்கள்/ அடிப்பவர்கள் சம்பளம் வாங்காமல் வேலை செய்யலாமே? ஏற்கெனவே ஏகப்பட்ட ஊழல்கள் - கட்சி பாகுபாடின்றி. படித்தவர்கள் யோசித்துப் பேச வேண்டும்.
மார் 07, 2026 06:39 pm
Rate this