கூட்டணி என்று சொன்னாலே ஆட்சிக்கான கூட்டணி தான்
புதிய தமிழகம் கட்சி, 22 மாவட்டங்களின் அனைத்து கிராமங்களிலும், கணிசமான ஓட்டு வங்கி வைத்திருக்கிறது. தேர்தலில், ஓட்டுகள் சிதறாமல் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியால், வறுமையின் எல்லைக்கோட்டில் வாழும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். ஆனால், தவறான புள்ளி விபரங்களை கொடுத்து தி.மு.க., அரசு ஏமாற்றுகிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருந்தால் தான், மக்கள் பிரச்னையை சரிசெய்ய முடியும். கூட்டணி என்று சொன்னாலே அது ஆட்சிக்கான கூட்டணியாக தான் இருக்க முடியும். 'எல்லாருடைய ஓட்டுகளையும் வாங்குவோம்; ஒரு சிலர் மட்டுமே ஆள்வோம்' என சொல்வது காலனி ஆதிக்கம் போன்றது. யாருடன் நாங்கள் கூட்டணி என்பது குறித்த பேச்சு, ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
--- கிருஷ்ணசாமி தலைவர், புதிய தமிழகம்
Advertisement

????