செல்வப்பெருந்தகையும் நானும் அண்ணன் - தம்பி போல!
காங்கிரஸ் இல்லாமல் தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாது என த.வெ.க., நிர்மல் குமார் கூறியது அவரது கருத்து. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் எனக்கும் பிரச்னை என்கின்றனர்.
ஆனால், அண்ணன் - தம்பி போன்ற எங்களிடையே பிரச்னை ஒன்றும் இல்லை. என் மீது, காங்., தலைமையிடம் புகார் அளிக்கப்போவதாக கூறுகின்றனர். அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஆட்சியில் பங்கு வேண்டும் என, ஜன., 17ம் தேதியே தலைமையிடம் பேசி விட்டேன். நான் ராஜினாமா செய்வதாக வதந்தி பரப்புகின்றனர்.
எங்களை பொறுத்தவரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது போல், தமிழக அணியா, டில்லி அணியா என போராடுகிறோம்; தேர்தலில் தமிழக அணி வெற்றி பெறும்.
- மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் எம்.பி.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (0)